ஐபிஎல் 2022 : ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் – முழு அணி, உத்தேச ப்ளேயிங் 11 இதோ

- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15வது சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இதில் 590 பங்கேற்ற போதிலும் அதிலிருந்து 204 வீரர்கள் மட்டுமே இறுதியில் 551 கோடி ரூபாய் செலவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தில் வழக்கம் போலவே இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல நட்சத்திர வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்கள்.

Dc

- Advertisement -

இந்த மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் ஆரம்பம் முதலே எதிரணிகளை திணறடித்தது என்றே கூறலாம். முக்கியமான வீரர்களை வாங்குவதற்கு சற்றும் யோசிக்காமல் எதிரணிகளுடன் போட்டி போட்ட அந்த அணி பல தரமான வீரர்களை வாங்கி அசத்தியது.

டெல்லி கேபிட்டல்ஸ்:
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக இந்தியாவின் தற்போதைய நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா, அக்சர் பட்டேல் மற்றும் அன்ரிச் நார்ட்ஜெ ஆகிய 4 முக்கிய வீரர்களை அந்த அணி தக்க வைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 6.25 கோடிகளுக்கு தங்கள் அணிக்காக விளையாட டெல்லி ஒப்பந்தம் செய்தது.

rcbvsdc

அதைவிட இந்திய ரசிகர்களால் “லார்ட்” என கொண்டாடப்படும் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூரை 10.75 என்ற மிகப்பெரிய தொகைக்கு போட்டி போட்டு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது. இறுதியில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் ஏல தொகையில் 89.90 கோடிகளை வாரி இறைத்துள்ள அந்த அணி நிர்வாகம் 24 வீரர்களை தங்கள் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணியில் 17 இந்திய வீரர்களும் 7 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள். இவர்களுக்கு வாங்க செலவு செய்த தொகை போக அந்த அணியிடம் மீதி 10 லட்சம் ரூபாய் ஏலத்தொகை உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ள முழு டெல்லி கேப்பிடல் அணி வீரர்களின் விபரம் இதோ:
ரிஷப் பண்ட் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி), பிரிதிவி ஷா (7.5 கோடி), அன்றிச் நோர்ட்ஜெ (6.5 கோடி), டேவிட் வார்னர் (6.25 கோடி), அஸ்வின் ஹெப்பர் (20 லட்சம்), சர்பராஸ் கான் (20 லட்சம்), கேஎஸ் பரத் (2 கோடி), மந்தீப் சிங் (1.10 கோடி), ரோவ்மன் போவெல் (2.80 கோடி), முஸ்தபிஸுர் ரஹ்மான் (2 கோடி), குல்தீப் யாதவ் (2 கோடி), கலில் அஹ்மத் (5.25 கோடி), சேட்டன் சகாரியா (4.2 கோடி), மிட்சேல் மார்ஷ் (6.50 கோடி), ஷர்டுல் தாகூர் (10.75 கோடி), கமலேஷ் நாகர்கோட்டி (1.1 கோடி), லலித் யாதவ் (65 லட்சம்), ரிபல் படேல் (20 லட்சம்), யாஷ் துள் (50 லட்சம்), பிரவீன் டுபெ (50 லட்சம்), டிம் ஷைபெர்ட் (50 லட்சம்), லுங்கி எங்கிடி (50 லட்சம்),
விக்கி ஒஸ்த்வால் (20 லட்சம்)

dc

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : இந்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

ஐபிஎல் 2022 தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கப் போகும் 11 பேர் கொண்ட உத்தேச டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதோ :
டேவிட் வார்னர்*, ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் (கேப்டன்-கீப்பர்), மிட்சேல் மார்ஷ்*, ரோவ்மன் போவெல்*, அக்சர் படேல், ஷார்துல் தாகூர், அன்றிச் நோர்ட்ஜெ*, லலித் யாதவ், கலீல் அஹமத்.

Advertisement