ஐபிஎல் 2022 : இந்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

KKR
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்ற 590 வீரர்களில் இருந்து இறுதியாக 204 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஐ.பி.எல் தொடர் முழுவதுமே கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நடைபெறவுள்ளன.

kkr

- Advertisement -

இந்த மெகா ஏலத்தில் 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை 12.25 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்து அசத்தியது. ஏற்கனவே கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட அவரை வரும் ஐபிஎல் தொடருக்கு தங்கள் அணியின் கேப்டனாகவும் அந்த அணி அறிவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் 7.25 கோடிகளுக்கு அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகிய 4 வீரர்களை ஏற்கனவே அந்த அணி தக்க வைத்திருந்தது.

kkr

அதை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் தங்களுக்கு தேவையான 21 வாங்கியதால் அந்த அணி தற்போது முழுமையாக காட்சி அளிக்கிறது. மொத்தம் வாங்கப்பட்ட 25 வீரர்களில் 17 இந்தியர்களும் 8 வெளிநாட்டவர்களும் உள்ளார்கள். மொத்தமாக இந்த ஏலத்தில் 89.55 கோடிகளை செலவு செய்துள்ள அந்த அணியிடம் மீதம் 45 லட்சங்கள் உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான முழு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதோ: ஆண்ட்ரே ரசல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரேன் (6 கோடி),ஷ்ரேயஸ் ஐயர் (12.25 கோடி), ஷெல்டன் ஜாக்சன் (60 லட்சம்), அஜிங்க்ய ரகானே (1 கோடி), ரிங்கு சிங் (55 லட்சம்), பாபா இந்திரஜித் (20 லட்சம்), அபிஜித் டோமர் (40 லட்சம்), சாம் பில்லிங்ஸ் (2 கோடி), அலெஸ் ஹேல்ஸ் (1.50 கோடி), ராசிக் தார் (20 லட்சம்), அசோக் சர்மா (55 லட்சம்), டிம் சௌதீ (1.5 கோடி), உமேஷ் யாதவ் (2 கோடி), பட் கம்மின்ஸ் (7.25 கோடி), நிதிஸ் ராணா (8 கோடி), ஷிவம் மாவி (7.25 கோடி), அனுகுல் ராய் (20 லட்சம்), சமிகா கருணாரட்னே (50 லட்சம்), ப்ரதம் சிங் (20 லட்சம்), ரமேஷ் குமார் (20 லட்சம்), முஹம்மத் நபி (1 கோடி), அமன் கான் (20 லட்சம்)

Kkr

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

ஐபிஎல் 2022 தொடரில் களம் இறங்கப் போகும் உத்தேச 11 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதோ:
வெங்கடேஷ் ஐயர், அலெஸ் ஹேல்ஸ்*, ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஷெல்டன் ஜேக்சன் (கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல்*, சுனில் நரேன்*, பட் கமின்ஸ்*, ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

Advertisement