இன்னும் ஒருமுறை அந்த தப்பு பண்ணா சஸ்பென்ட் தான்.. சிக்கலில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

Samson
- Advertisement -

இந்தியாவில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றதோடு மட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்திலும் நீடிக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 19 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் செய்த தவறினால் அடுத்த ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மீண்டும் அவர் அதே தவறை செய்யும் பட்சத்தில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க இருப்பதும் உறுதியாகியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் பந்துவீசும் அணி குறிப்பிட்ட நேரத்தில் ஓவரை வீசி முடிக்கவில்லை எனில் முதல் முறையாக தண்டனை வழங்கப்படும். அந்த வகையில் முதல் முறையாக தண்டனை வழங்கப்படும் போது கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

- Advertisement -

அதே சமயம் இரண்டாவது முறையும் அதேபோல நடந்தால் 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும் மேலும் மூன்றாவது முறையும் அதே தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஏற்கனவே குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காமல் தாமதம் செய்திருந்தார்.

இதையும் படிங்க : இவர் தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம்.. ராஜஸ்தான் வீரருக்கு ரவி சாஸ்திரி பாராட்டு

அதன்பிறகு தற்போது லக்னோ அணிக்கு எதிராகவும் இரண்டாவது முறையாக தாமதம் செய்துள்ளார். பிளேஆப் சுற்று நெருங்கி வரும் வேளையில் மூன்றாவது முறையும் அதே தவறு நடைபெறும் பட்சத்தில் நிச்சயம் சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement