நல்லவேளை அது தொல்லை பண்ணல.. இந்தியாவை பற்றி தெரிஞ்சுகிட்டேன்.. சின்னசாமியிலும் ஏதோ இருக்கு.. க்ரீன் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி நடைபெற்ற 62வது லீக் போட்டியில் டெல்லியை 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு போராடி 20 ஓவரில் 187/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஜத் படிடார் 52, வில் ஜேக்ஸ் 41, கேமரூன் க்ரீன் 32* ரன்கள் எடுத்தனர்.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது 2, ரசிக் சலாம் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 188 ரன்களை துரத்திய டெல்லிக்கு ஜேக் பிரேசர்-மெக்குர்க் 21, டேவிட் வார்னர் 1, அபிஷேக் போரேல் 2, சாய் ஹோப் 29, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 3 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் தற்காலிக கேப்டன் அக்ஸர் பட்டேல் அதிகபட்சமாக 57 (39) ரன்கள் எடுத்தும் 19.1 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டான டெல்லி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் க்ரீன்:
பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் 3, லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதனால் 6வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் டெல்லி, லக்னோ போன்ற அணிகளை பின்னுக்குத் தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியது. அதன் காரணமாக பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் பெங்களூரு அணி அதிகப்படுத்தியுள்ளது.

இந்த வெற்றியில் 32* (24) ரன்கள் 1 விக்கெட் எடுத்து ட்ரிஷன் ஸ்டப்ஸை ரன் அவுட்டாக்கி ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் சின்னசாமி சிறிய மைதானமாக இருந்தாலும் பவுலர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவக்கூடிய பிட்ச்சை கொண்டிருப்பதாக தெரிவிக்கும் க்ரீன் இந்தியாவில் உள்ள கால சூழ்நிலைகளை நன்றாக தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இப்போட்டியில் பனி எந்த தொல்லையையும் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இது சிறந்த போட்டி. கடந்த சில போட்டிகளாக நாங்கள் ஃபார்மை கண்டறிந்து விட்டோம். ஆரம்பத்தில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் இப்போதும் வெற்றிக்கான வேட்டையில் இருக்கிறோம். நாங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதை இன்று செய்தோம். பிட்ச் நன்றாக இருந்தது. அதில் அனைவருக்கும் ஏதோ ஒரு உதவி கிடைத்தது”

இதையும் படிங்க: 47 ரன்ஸ்.. டெல்லிக்காக போராடிய அக்சர்.. 2009, 2016 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்திய ஆர்சிபி.. பிளே ஆஃப் செல்லுமா?

“குறிப்பாக அதில் வேகத்தை எதிர்கொள்வது எளிது என கண்டறிந்தோம். கலீல் அகமது நிறைய ஆஃப் கட்டர் பந்துகளை வீசினார். அதை அடிப்பதற்கு கடினமாக இருந்ததால் நாங்களும் அதையே எங்களுடைய பந்து வீச்சில் முயற்சித்தோம். நல்லவேளையாக இன்று பனி வரவில்லை. சின்னசாமி மைதானம் மிகவும் சிறியது. ஆனால் அதிலும் பவுலர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைக்கிறது” என்று கூறினார்.

Advertisement