200 ரன்ஸ்.. ஆர்சிபியை அடித்த தமிழக ஜோடி.. விராட் கோலிக்கு அடுத்த இடத்தை பிடித்து சாய் சுதர்சன் அசத்தல்

GT vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் 45வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியல் கடைசி இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு முதல் ஓவரிலேயே ரிதிமான் சகா 5 (4) ரன்னில் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாற்றமாக பேட்டிங் செய்த கேப்டன் சுப்மன் கில் 16 (19) ரன்களில் மேக்ஸ்வெல் சுழலில் அவுட்டானார். அந்த நிலையில் வந்த மற்றொரு தமிழக வீரர் சாருக்கான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

அசத்திய தமிழக ஜோடி:
அந்த வகையில் 7வது ஓவரில் இணைந்த சாய் சுதர்சன் – சாருக்கான் தமிழக ஜோடி பெங்களூரு பவுலர்களை மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதில் சற்று அதிரடியாக விளையாடிய சாருக்கான் 24 பந்துகளில் 50 ரன்கள் கடந்து ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். அப்படியே 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை வலுப்படுத்திய அவர் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 58 (30) ரன்களில் சிராஜ் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அவருடன் சேர்ந்து எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய சாய் சுதர்சன் தனது பங்கிற்கு அரை சதமடித்து குஜராத்தை 150 ரன்கள் தாண்ட வைத்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாத அவர் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (49) ரன்கள் விளாசினார். அவருடன் கடைசியில் டேவிட் மில்லர் 26* (19) ரன்கள் எடுத்தது நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் குஜராத் 200/3 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், கிளன் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர். மேலும் இந்த போட்டியில் அடித்த 84 ரன்களையும் சேர்த்து தமிழக வீரர் சாய் சுதர்சன் மொத்தமாக இந்த சீசனில் 415 ரன்கள் அடித்துள்ளார். அதனால் இந்த வருடம் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 430
2. சாய் சுதர்சன் : 415*
3. சஞ்சு சாம்சன் : 385

இதையும் படிங்க: இன்னும் ஒருமுறை அந்த தப்பு பண்ணா சஸ்பென்ட் தான்.. சிக்கலில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

இதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் பெங்களூரு பிளே ஆஃப் சுற்று வைப்பை தக்க வைத்துக்கொள்ள இப்போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சேசிங் செய்து வருகிறது. இதற்கு முன் 200 ரன்களை ஒரு முறை மட்டுமே சேசிங் செய்துள்ளதால் இன்றைய போட்டியில் பெங்களூரு வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement