Home கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil ஆசிய கோப்பை சென்னை 28 சிவா மாதிரி க்ளீன் போல்டாகிட்டாரு, ரோஹித் சர்மாவை ஓப்பனாக கலாய்த்த – முன்னாள்...

சென்னை 28 சிவா மாதிரி க்ளீன் போல்டாகிட்டாரு, ரோஹித் சர்மாவை ஓப்பனாக கலாய்த்த – முன்னாள் தமிழக வீரர், ரசிகர்கள் அதிருப்தி

Rohit Sharma Bowled
-Advertisement-

ஆசிய கோப்பை 2023 தொடரில் இலங்கையின் கண்டி நகரில் செப்டம்பர் 2ஆம் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி 48.5 ஓவரில் 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிசான் 82 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 87 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து வந்த மழை மொத்தமாக போட்டியை ரத்து செய்ததால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கொடுக்கப்பட்டது.
முன்னதாக இப்போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அவர் வழக்கம் போல 2 பவுண்டரிகள் அடித்து 11 (22) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் ஷாஹீன் அப்ரிடியின் துல்லியமான ஸ்விங் பந்தை கணிக்க முடியாமல் கிளீன் போல்ட்டாகி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

சிவா மாதிரி:
அதை தொடர்ந்து விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியாவை நல்ல வேளையாக இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி ஓரளவு காப்பாற்றினர். முன்னதாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சாகின் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து பெரிய சவாலை கொடுப்பார் என்று நிறைய முன்னாள் வீரர்கள் எச்சரித்தும் அஜாக்கிரதையாக செயல்பட்ட விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

குறிப்பாக விராட் கோலியாவது 2021 டி20 உலக கோப்பையில் அவரை சிறப்பாக எதிர்கொண்டு 51 ரன்களும் 2022 டி20 உலக கோப்பையில் 82* ரன்களும் எடுத்து சிறப்பாக செயல்பட்ட நிலையில் இப்போட்டியில் துரதிஷ்டவசமாக இன்சைட் முறையில் அவுட்டாகி சென்றார். ஆனால் 2021, 2022 டி20 உலக கோப்பைகளில் அவரிடம் பெட்டி பாம்பாக அடங்கிய ரோகித் சர்மா இம்முறையும் கொஞ்சம் கூட பெரிய பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் க்ளீன் போல்ட்டானார்.

- Advertisement -

அப்போது ரோஹித் சர்மா அவுட்டான விதம் பிரபல சென்னை 600028 தமிழ் திரைப்படத்தில் சிறுவர்களுடன் கடற்கரை ஓரத்தில் கிரிக்கெட் விளையாடும் போது சிவா “அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் கிளீன் போல்ட்டான ஷாட்டை” போல் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ட்விட்டரில் ஓப்பனாக கலாய்த்துள்ளார். ஏற்கனவே பார்ப்பதற்கு தமிழ் நடிகர் சிவா போல் இருப்பதால் பலமுறை அவருடன் ரோகித் சர்மாவை ஒப்பிட்டு ரசிகர்கள் கலாய்ப்பது வழக்கமாகும்.

இதையும் படிங்க: என்னை விடுங்க. அவரு என்னா ஸ்பீடா பவுலிங் பண்றாரு பாருங்க – ஷாஹீன் அப்ரிடி பாராட்டு

அந்த வரிசையில் தற்போது சுப்ரமணியம் பத்ரிநாத் இணைந்துள்ளது பலரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. அதே சமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து தற்போது கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ள ரோகித் சர்மாவை பற்றி சர்வதேச கிரிக்கெட்டில் எதுவுமே சாதிக்காத உங்களுக்கு பேச என்ன தகுதி இருக்கிறது? என அவருடைய ரசிகர்கள் சுப்பிரமணியன் பத்ரிநாத்தை தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-