என்னை விடுங்க. அவரு என்னா ஸ்பீடா பவுலிங் பண்றாரு பாருங்க – ஷாஹீன் அப்ரிடி பாராட்டு

Shaheen-Afridi
- Advertisement -

நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டியானது நேற்று செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 82 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 87 ரன்களையும் குவித்தனர். அவர்களை தவிர்த்து வேறு எந்த வீரரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நேற்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குவதற்கு முன்னதாக மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக தடைப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மழை பெய்து கொண்டே இருந்ததால் அம்பயர்கள் வெற்றி தோல்வியின்றி புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு இந்த போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த ஷாஹீன் அப்ரிடி போட்டி முடிந்த பின்னர் இந்த ஆட்டம் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : எங்களுடைய திட்டம் புதுப்பந்தில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதுதான். அந்த வகையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதையும் படிங்க : ஷாஹீனுக்கு எதிரா உங்க ஜாம்பவானுக்கு பேட்டை புடிக்க கூட தெரில – நட்சத்திர இந்திய வீரரை கலாய்த்த சோயப் அக்தர்

எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக நசீம் ஷா மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசி அசத்துகிறார். அவருடைய பந்துவீச்சை பார்க்கும் போது மிக அருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. புதுப்பந்தில் அவர் நன்றாக ஸ்விங் செய்து நல்ல வேகத்துடன் வீசுகிறார் என நசீம் ஷாவை ஷாஹீன் அப்ரிடி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement