ஷாஹீனுக்கு எதிரா உங்க ஜாம்பவானுக்கு பேட்டை புடிக்க கூட தெரில – நட்சத்திர இந்திய வீரரை கலாய்த்த சோயப் அக்தர்

Shoaib Akhtar 2
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான லீக் போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பம் முதலிலேயே திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 48.5 ஓவரில் 266 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிசான் 82, ஹர்டிக் பாண்டியா 87 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றிய நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து சேசிங் செய்வதற்காக களமிறங்கிய பாகிஸ்தானை பேட்டிங் செய்ய விடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக இந்த போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று நிறைய முன்னாள் வீரர்கள் எச்சரித்தும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கொஞ்சம் கூட நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் கிளீன் போல்ட்டாகி இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

கலாய்த்த அக்தர்:
அதில் விராட் கோலியாவது துரதிஷ்டவசமாக இன்சைட் எட்ஜ் வாங்கி போல்டான நிலையில் ஷாஹீன் அப்ரிடி வீசிய ஸ்விங் பந்தை கொஞ்சம் கூட கணிக்காத கேப்டன் ரோகித் சர்மா மொத்தமாக சொதப்பி க்ளீன் போல்ட்டானார். இது மட்டுமல்லாமல் 2021 டி20 உலகக் கோப்பையிலும் ஷாஹீன் அப்ரிடியிடம் பெட்டி பாம்பாக அடங்கி இந்தியாவின் சரித்திரத் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த ரோகித் சர்மா 2022 டி20 உலகக் கோப்பையிலும் ஆரம்பத்திலேயே அவுட்டாகி விராட் கோலி காப்பாற்றுவதற்கு முன்பாக பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து ஜாம்பவானாக திகழும் ரோஹித் சர்மாவால் எப்போதுமே ஷாஹீன் அப்ரிடியின் பந்துகளை கொஞ்சம் கூட படிக்க முடியவில்லை என முன்னாள் பாகிஸ்தான் கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷாஹீன் பந்துகளை ரோகித் சர்மாவால் படிக்க அல்லது புரிந்துகொள்ள முடிகிறது என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் ரோகித் சர்மா அவுட்டான விதம் கொஞ்சம் கூட நன்றாக இல்லை. ஏனெனில் அவர் இன்னும் சிறந்த வீரர்”

- Advertisement -

“அனேகமாக அவர் ஷாஹீனை நினைத்து அதிகமாக கவலைப்படுகிறார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். மேலும் சுப்மன் கில் விக்கெட் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அடிக்கடி மழை வந்து வீரர்கள் உள்ளே வெளியே சென்றதால் பேட்ஸ்மேன்களின் கவனமும் குறைந்தது. அதனாலயே சுப்மன் கில் தம்முடைய கவனத்தை இழந்து சுமாரான ஷாட்டை அடித்து ஆட்டமிழந்தார்”

இதையும் படிங்க: இதெல்லாம் வீட்டோட வெச்சுக்கோங்க, தேசப்பற்று கொஞ்சமாவது இருக்கா? விராட் கோலியை விளாசிய கம்பீர் – காரணம் இதோ

“மறுபுறம் ஷாஹீன் அப்ரிடி என்ன மாதிரியான ஸ்பெல்லை வீசினார். குறிப்பாக பிட்ச் செய்து அவர் உள்ளே கொண்டு வந்த பந்துக்கு எதிராக ரோகித் சர்மாவிடம் எந்த பதிலுமில்லை. சொல்லப்போனால் 2022 போட்டியிலும் இதே போல டிபன்ஸ் ஷாட் விளையாடியே அவர் அவுட்டானார். அவர் அடிக்கடி அப்ரிடியை எதிர்கொள்வதற்கான வாய்ப்பை பெறுவதில்லை என்பதே இந்த தடுமாற்றத்திற்கான காரணம் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement