IND vs WI : பாவங்க சஞ்சு சாம்சன், நாட்டுக்கு விளையாட இது தான் ஒரே வழி போல – இந்திய அணி நிர்வாகத்தை சாடிய பத்ரிநாத்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டு இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் 2011 உலக கோப்பையில் கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் என இடதுகை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

ஆனால் தற்போதைய அணியில் ரோகித் முதல் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்கள் அனைவருமே வலது கை வீரர்களாக இருப்பதால் இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்று சொல்லலாம். இருப்பினும் கடந்த பிப்ரவரி ஆஸ்திரேலியாக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்த சூரியகுமார் யாதவ் மீண்டும் இந்த தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

பத்ரிநாத் விமர்சனம்:
ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி 3 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறை வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவர் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்ப முதலே தடுமாற்றுமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

குறிப்பாக கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் 19, 0, 0, 0, 14, 0, 31, 4, 6, 34, 4 என ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் மொத்தமாக 24 போட்டிகளில் 452 ரன்களை 23.78 என்ற சராசரியில் எடுத்து சுமாராக செயல்பட்டும் இத்தொடரின் முதல் போட்டியில் வாய்ப்பு பெற்று 19 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். மறுபுறம் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய கொடுமையை சந்தித்த சஞ்சு சாம்சன் 2021 வரை குப்பையை போல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்தார்.

- Advertisement -

அதனால் ஒரு வழியாக 2022 அயர்லாந்து டி20 தொடரில் முதல் முறையாக அரை சதமடித்து ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார். அதனால் நிலையான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை மனசாட்சியின்றி கடைசியாக நடந்த வங்கதேசம், இலங்கை, நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் கழற்றி விட்ட இந்திய அணி நிர்வாகம் சுமாரான செயல்பட்ட கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தது.

ஆனால் தற்போது ரிஷப் பண்ட், ராகுல் ஆகிய இருவருமே காயமடைந்ததால் கடைசி 7 போட்டிகளில் 6*, 43*, 15, 36, 2*, 30*, 86* என நல்ல ரன்களை எடுத்து சூரியகுமாரை விட மொத்தமாக 10 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 330 ரன்களை 66 என்ற சராசரியில் எடுத்துள்ள சஞ்சு சாம்சனுக்கு இத்தொடரிலாவது வாய்ப்பு கொடுங்கள் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் பார்பர்டஸ் நகரில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் ஜெர்சி கிடைக்காததால் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து கொண்டு சூரியகுமார் விளையாடியது சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் “இது தான் இந்திய 11 பேர் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடிப்பதற்கான ஒரே வழி போல” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : அடுத்த மேட்ச்லயே என்னை ட்ராப் பண்ணாலும் ரெடியா இருக்கேன் – குல்தீப் யாதவ் ஆதங்க பேட்டி, காரணம் இதோ

அதிலும் குறிப்பாக சாம்சன் பெயருடன் சூரியகுமார் அவுட்டான புகைப்படத்தை தேடி பிடித்து பதிவிட்டுள்ள அவர் சுமாராக செயல்படும் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து சிறப்பாக செயல்பட்டு காலம் காலமாக காத்திருக்கும் சஞ்சுவை கழற்றி விட்டு வரும் இந்திய அணி நிர்வாகத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement