IND vs WI : அடுத்த மேட்ச்லயே என்னை ட்ராப் பண்ணாலும் ரெடியா இருக்கேன் – குல்தீப் யாதவ் ஆதங்க பேட்டி, காரணம் இதோ

Kuldeep yadav 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. பார்படாஸ் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்த தரமான பந்து வீச்சில் அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் 43 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இதர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 115 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய இந்தியா இஷான் கிசான் 52 (46) ரன்கள் எடுத்த உதவியுடன் 22.5 ஓவரிலேயே எளிதான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 3 ஓவரில் 2 மெய்டன் உட்பட வெறும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அவர் 2017இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடி அஸ்வினை மிஞ்சும் அளவுக்கு அசத்தினார்.

- Advertisement -

எல்லாத்துக்கும் தயார்:
குறிப்பாக சிட்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த முதல் இந்தியராக சாதனை படைத்து அசத்தி வந்தார். இருப்பினும் அதன் பின் ஃபார்மை இழந்ததால் 2021 டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவரை ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவும் விடுவித்தது. அதற்கிடையே சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் 2022, 2023 சீசன்களில் டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார்.

ஆனால் 2022 டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இதே போல ஆட்டநாயகன் விருது வென்ற அவரை 2வது போட்டியில் கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் ராகுல் டிராவிட் – கேஎல் ராகுல் ஆகியோர் சேர்ந்து கொண்டு கழற்றி விட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். இந்நிலையில் அதே போல இப்போட்டியில் ஆட்டநாயக்கன் விருது வென்றுள்ள தம்மை அடுத்த போட்டியில் அணியின் கலவைக்காக நீக்கினால் அதற்காக கவலைப்படாமல் அந்த சூழ்நிலையை சந்திக்க தயாராக இருப்பதாக குல்தீப் யாதவ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக சிறப்பாக செயல்பட்டாலும் நிலையான வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலைகளை சந்தித்து பழகி விட்டதாக தெரிவிக்கும் அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இது பற்றி முதல் போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “பெரும்பாலான சமயங்களில் சூழ்நிலை மற்றும் அணியின் கலவை காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இருப்பினும் தற்போது அது எனக்கு பழகி சாதரணமாகி விட்டது. குறிப்பாக 6 வருடத்திற்கு மேல் விளையாடியும் இதுவரை நிலையான வாய்ப்பு கிடைக்காதது எனக்கு தற்போது சாதாரணமாகி விட்டது”

“அதனால் தற்போது நான் விக்கெட்டுகளை எடுப்பதை பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை. மாறாக செயல்பாடுகள் மற்றும் சரியான லென்த் ஆகியவற்றில் முழுமையான கவனம் செலுத்துகிறேன். காயத்திலிருந்து குணமடைந்து விளையாடி வரும் கடந்த ஒன்றரை வருடங்களில் நான் பெரும்பாலும் நல்ல லென்த்தில் பந்து வீசுவதற்கு முயற்சி செய்து வருகிறேன். எனவே நான் லென்த்தில் மட்டும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்”

இதையும் படிங்க:கேரியர் முடிஞ்ச்சு போய்ட்டு வரேன், புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அறிவிப்பால் – ரசிகர்கள் சோகம்

“ஏனெனில் ஒரு நாள் உங்களுக்கு அதிகமான விக்கெட்டுகள் கிடைக்கும். இன்னொரு நாள் சிறப்பாக செயல்பட்டும் விக்கெட்டுகள் கிடைக்காமல் போகலாம். மேலும் சூழ்நிலைகளும் வித்தியாசமாக இருக்கும் என்பது முக்கியமாகும். அதனால் எதிரணி 4 – 5 இழந்து தடுமாறும் போது மட்டுமே நான் வேரியேஷன்களை பயன்படுத்துகிறேன்” என்று கூறினார். இருப்பினும் இப்போதிலிருந்து கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து அசத்தினாலே நிச்சயமாக 2023 உலக கோப்பையில் குல்தீப் யாதவுக்கு இடம் கிடைக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement