கேரியர் முடிஞ்ச்சு போய்ட்டு வரேன், புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அறிவிப்பால் – ரசிகர்கள் சோகம்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்காக விளையாடும் 11 பேர் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து நீண்ட காலம் விளையாடுவது மிகப்பெரிய சவாலான காரியம் என்று சொல்லலாம். அது போன்ற சூழ்நிலையில் ஏற்கனவே விளையாடும் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் கொஞ்சம் காயமடைந்து வெளியேறினாலும் இடத்தை தக்க வைத்துக் கொள்வது கடினமாகி விடுகிறது. அந்த நிலைமையில் தான் தற்போது நட்சத்திர இந்திய சீனியர் வீரர் புவனேஸ்வர் குமார் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அவர் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி நிரந்தரமான இடத்தையும் பிடித்தார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை தொடர்களில் முதன்மை பவுலராக விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
மேலும் ஐபிஎல் தொடரில் குறைந்த ரன்களை கொடுத்து விக்கெட்களை எடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டதால் புவனேஸ்வர் குமார் என்றாலே ஸ்விங் மற்றும் துல்லியத்திற்கு பெயர் போனவராக உருவெடுத்தார். இருப்பினும் 2019க்குப்பின் காயத்தை சந்தித்து தடுமாறிய அவர் டெஸ்ட் அணியில் வாய்ப்பிழந்த நிலையில் ஐபிஎல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுமாற்றமாக செயல்பட்டார். அதே போலவே 2021 டி20 உலக கோப்பையிலும் சுமாராகவே செயல்பட்ட அவர் அப்போதிலிருந்தே நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார்.

அந்த வரிசையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாராக செயல்பட்ட அவருக்கு போட்டியாக பும்ரா, சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்துள்ளனர். அதன் காரணமாக கடைசியாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடியிருந்த அவரை 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கும் நோக்கத்தில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ள தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

- Advertisement -

போதாகுறைக்கு 2023 ஐபிஎல் தொடரிலும் 14 போட்டிகளில் வெறும் 16 விக்கெட்டுகளை 8.33 என்ற எக்கனாமியில் எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலே செயல்பட்ட அவரை தற்போது உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாததால் 2023 உலகக் கோப்பையிலும் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் யோசிக்கின்றனர். அத்துடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்க நினைக்கும் இந்திய அணி நிர்வாகமும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க யோசித்து வருகிறது.

இந்நிலையில் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் வரை “இந்திய கிரிக்கெட் வீரர்” என்று வைத்திருந்த தன்னுடைய அடையாளத்தை தற்போது வெறும் “இந்தியன்” என்று புவனேஸ்வர் குமார் மாற்றியுள்ளார். குறிப்பாக கடந்த வாரம் ரிங்கு சிங்குவுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்த போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய வீரர் என்றே குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய தொடர்களுக்கு தயாராகும் பயணம் தற்போது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் துவங்கியுள்ளது.

- Advertisement -

அதில் விளையாடும் ஒருநாள் மட்டும் டி20 தொடருக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம் பிடிக்காத நிலையில் முகேஷ் குமார், உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால் தம்முடைய கேரியர் முடிந்த நிதர்சனத்தை புரிந்து கொண்டு யாரையும் குறை சொல்லாமல் புவனேஸ்வர் குமார் விடைபெற முடிவெடுத்துள்ளதையே இப்படி மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:கேரியர் முடிஞ்ச்சு போய்ட்டு வரேன், புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அறிவிப்பால் – ரசிகர்கள் சோகம்

மேலும் கடைசி அடுத்த மாதம் நடைபெறும் அயர்லாந்து டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் அவர் ஒருவேளை கிடைக்கவில்லையெனில் ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ஒருதரப்பு ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement