எப்டி நீங்க அண்ணன் தம்பியா இல்லாம போனீங்க? ஜஹீர் கான் – இஷாந்த் சர்மாவை பாத்து வாய் பிளக்கும் ரசிகர்கள், காரணம் இதோ

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சுனில் காவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை உருவாக்குவதற்கு எப்போதுமே தவறுவதில்லை. அதே போலவே அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் என இந்தியாவின் மகத்தான ஸ்பின்னர்கள் உலகின் பல ஜாம்பவான் வீரர்களுக்கு சவாலை கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இருப்பினும் அந்த காலத்திலிருந்தே இந்தியாவில் கபில் தேவ், ஜவஹல் ஸ்ரீநாத் என கைவிட்டு எண்ணக்கூடிய அளவுக்கே மகத்தான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது.

அந்த வரிசையில் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் கடந்த தலைமுறையின் இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அதிலும் இடது கை வீரரான அவர் மிகவும் ஸ்டைலாக பந்து வீசி கிரேம் ஸ்மித் போன்ற நிறைய வெளிநாட்டு வீரர்களுக்கு சவாலை கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறிப்பாக 2011 உலக கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த அவர் 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அண்ணன் தம்பி கேரியர்:
அந்த வகையில் 1999இல் அறிமுகமாகி 2014 வரை சிறப்பாக செயல்பட்ட அவருடைய ஜூனியராக கடந்த 2007இல் அறிமுகமான இஷாந்த் சர்மாவும் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பவுலராக செயல்பட்டார் என்றே சொல்லலாம். அதிலும் நல்ல உயரத்தை கொண்ட அவர் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் தோனியின் நம்பிக்கையை காப்பாற்றி பெற்றுக் கொடுத்த வெற்றியும் 2014 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் சாய்த்து பெற்றுக் கொடுத்த வரலாற்று வெற்றியையும் மறக்க முடியாது.

இருப்பினும் முகமது சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்கள் வந்த காரணத்தாலும் சமீப காலங்களில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற காரணத்தாலும் 34 வயதாகும் அவருக்கு இந்திய அணியில் முற்றிலுமாக வாய்ப்பு முடிவடைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடரில் முதல் முறையாக வர்ணனையாளராக அவதரித்த இஷாந்த் சர்மா அங்கேயும் தன்னுடைய சீனியரான ஜஹிர் கானுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

அப்போது இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த இருவரும் எடுத்த விக்கெட்டுகள் அடங்கிய புள்ளி விவரங்களை போட்டியை ஒளிபரப்பிய ஜியோ சினிமா சேனல் ரசிகர்களுக்கு காட்டியது. அதை பார்த்த ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் இருவருமே மிகச் சரியாக தங்களுடைய கேரியரில் தலா 311 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருவருமே சரிக்கு சமமாக தலா 11 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் 1 முறை ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். அத்தோடு நிற்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் இருவருமே கச்சிதமாக தலா 104 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அதையும் தாண்டி இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இருவருமே துல்லியமாக 207 விக்கெட்களை எடுத்துள்ளார்கள்.

- Advertisement -

அதைப் பார்த்த ஜஹீர் கான் “இது பார்ப்பதற்கு ஒன்றாக இல்லை. அப்படியே ஒன்றை போல் ஒன்று இருக்கிறது” என்று கூறினார். மேலும் அதைப் பார்க்கும் ரசிகர்கள் மிகவும் நம்ப முடியாத வகையில் இந்த புள்ளி விவரங்கள் இருப்பதால் “எப்படி நீங்க அண்ணன் தம்பிகளாக இல்லாமல் போனீங்க” என்ற வகையில் சமூக வலைதளங்களில் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:IND vs WI : எவ்ளோ டைம் சொல்றது? இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு, சாம்சனுக்கு சான்ஸ் கொடுங்க – இந்திய அணியை விளாசும் ரசிகர்கள்

அத்துடன் ஜஹீர் கானுக்கு நிகராக இஷாந்த் சர்மா செயல்பட்டுள்ளது இதிலிருந்து தெரிவதாகவும் சில ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஜாகிர் கான் 92 போட்டிகளில் 311 விக்கெட்களை எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா 105 போட்டிகளில் 311 போட்டிகளில் எடுத்தது சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக அமைவது குறிப்பிடத்தக்கது.

Advertisement