IND vs WI : எவ்ளோ டைம் சொல்றது? இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு, சாம்சனுக்கு சான்ஸ் கொடுங்க – இந்திய அணியை விளாசும் ரசிகர்கள்

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜூலை 27 ஆம் தேதி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தரமாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக சாய் ஹோப் 43 (45) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 115 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (46) ரன்கள் எடுத்த போதிலும் சுப்மன் கில் 9, சூரியகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5, சர்துல் தாக்கூர் 1 என இளம் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

விளாசும் ரசிகர்கள்:
இறுதியில் ரோகித் சர்மா 12* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 19* ரன்கள் எடுத்ததால் 22.5 ஓவரிலேயே இந்தியா வென்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 2 விக்கெட்களை சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்தது.

இருப்பினும் 2011 உலகக் கோப்பையில் கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் முதல் பாண்டியா வரை அனைவருமே வலது கை வீரர்களாக இருப்பதை கருத்தில் கொண்டு இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்த சூரியகுமார் யாதவ் மீண்டும் இப்போட்டியில் வாய்ப்பு பெற்று 19 (25) ரன்களில் அவுட்டானது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கி முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவர் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தில் நாலாபுறங்களிலும் கற்பனை செய்ய முடியாத ஷாட்டுகளை பறக்க விட்டு எதிரணியை பந்தாடி பெரிய ரன்களை குவித்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடப்படும் அவர் சற்று மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்ப முதலே தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இதுவரை 24 போட்டிகளில் வெறும் 452 ரன்களை 23.78 என்ற சுமாரான சராசரியில் எடுத்துள்ளார். அதிலும் டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 3 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் அப்படியே நேர்மாறாக ஒரு சதம் கூட அடிக்காமல் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

மறுபுறம் 2017இல் அறிமுகமாகி 2021 வரை குப்பையை போல் பயன்படுத்தப்பட்டு வந்த சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் போராடி கடந்த 2022 அயர்லாந்து டி20 தொடரில் முதல் முறையாக அரை சதமடித்து ஜிம்பாப்வே தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று தென்னாபிரிக்க தொடரில் 3 போட்டிகளிலும் பெரிய ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க:IND vs WI : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு வெற்றியை பெற்ற இரண்டாவது அணி இந்தியாதானாம் – விவரம் இதோ

அதனால் நிலையான வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை மனசாட்சியின்றி கழற்றி விட்ட இந்திய அணி நிர்வாகம் வங்கதேசம், இலங்கை, நியூசிலாந்து போன்ற சமீபத்திய தொடர்களில் சுமாராக செயல்பட்ட கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தது. இருப்பினும் தற்போது ராகுல், பண்ட் ஆகிய இருவருமே காயமடைந்துள்ள நிலையில் 10 இன்னிங்ஸில் 330 ரன்களை 66 என்ற சராசரியில் எடுத்து சூரியகுமாரை விட ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாம்சனுக்கு இந்த தொடரிலாவது வாய்ப்பு கொடுங்கள் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Advertisement