IND vs WI : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு வெற்றியை பெற்ற இரண்டாவது அணி இந்தியாதானாம் – விவரம் இதோ

Ishan-Kishan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஜூலை 27-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Jadeja

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் துவக்க முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரிய சறுக்கலை சந்தித்தது. இறுதியில் 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 114 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 22.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

Ishan-Kishan-1

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் இருக்கும் வேளையில் மேலும் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை மிச்சம் வைத்து ஐந்து விக்கெட் மற்றும் அதற்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக இலங்கை அணி முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடிய இலங்கை அணியானது 30 ஓவர்கள் மிச்சம் இருக்கையில் அதாவது 180 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்று அந்த சாதனையை நிகழ்த்தி அசத்தியது.

இதையும் படிங்க : IND vs WI : சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து சூரியகுமார் யாதவ் விளையாட என்ன காரணம் – ஐ.சி.சி கூறும் ரூல்ஸ் என்ன?

அதனை பின்னர் இந்திய அணி தான் இந்த பட்டியலில் இரண்டாவது அணியாக நேற்றைய போட்டியில் 163 பந்துகள் மிச்சம் உள்ள வேளையில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று அதிக பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement