IND vs WI : சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து சூரியகுமார் யாதவ் விளையாட என்ன காரணம் – ஐ.சி.சி கூறும் ரூல்ஸ் என்ன?

SKY
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் பார்படாஸ் நகரில் நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

WI

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாமல் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டிருந்தார். அதேவேளையில் இந்த ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடிய அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் ஏன் அப்படி சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சன் ஜெர்சியை அணிந்து விளையாடினார்? அவர் இப்படி விளையாட என்ன காரணம்? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை நாங்கள் இங்கே உங்களுக்காக தெளிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி : சூரியகுமார் யாதவ் வழக்கமாக பயன்படுத்தும் லார்ஜ் சைஸ் ஜெர்சி அவருக்கு இன்னும் வந்து சேரவில்லையாம். வழக்கமாக போட்டிகளின் போது லார்ஜ் சைஸ் ஜெர்சி அணிந்தே சூர்யகுமார் யாதவ் விளையாடுவாராம்.

SKY-1

ஆனால் இந்த போட்டிக்காக அவருக்கு வந்திருந்த சீருடை மீடியம் சைஸ் என்பதனால் அது அவருக்கு அசவுகரித்தை கொடுத்ததாலே சஞ்சு சாம்சன் ஜெர்சியை அணிய முடிவு செய்து போட்டியின் போது அந்த ஜெர்சியை பயன்படுத்தி விளையாடினார் என்று கூறப்படுகிறது. மேலும் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அவர் போட்டோஷூட்டின் போது கூட மீடியம் சைஸ் ஜெர்சியையே பெற்றுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அது போட்டோ ஷூட் தான் என்பதனால் அப்போது அவர் அதை ஒத்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர் போட்டிகளின் போது லார்ஜ் சைஸ் ஜெர்சி தான் வேண்டும் என்று நிர்வாகத்திடம் தெரிவிக்க அந்த கிட் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலே சூரியகுமார் யாதவ் சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடி உள்ளார் என்று கூறப்படுகிறது,

இதையும் படிங்க : டீ காக் அதிரடியில் குவாலிபயர் 1 போட்டியில் தோற்ற சூப்பர் கிங்ஸ் – கடைசி வாய்ப்பில் எதிரியை சமாளித்து ஃபைனல் செல்லுமா?

அதே போன்று ஐசிசி விதிமுறைப்படி : ஒரு வீரர் மற்றொரு வீரரின் ஜெர்சியை அணிந்து விளையாடினால் அந்த ஜெர்சியில் உள்ள பெயரையோ, நம்பரையோ கருப்பு டேப்பை கொண்டு மறைக்கக் கூடாது என்ற காரணத்தினாலும் அவர் சாம்சனின் பெயர் தெரிய அப்படியே விளையாடியுள்ளார். மேலும் இரண்டாவது போட்டியிலும் அவருக்கு உண்டான சரியான கிட் வரவில்லை என்றால் மீண்டும் அவர் இதே ஜெர்சியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement