
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது 193 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 170 ரன்களுக்கு சுருண்டது. இதன்காரணமாக 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியின் போது கடைசி இன்னிங்சில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தால் இந்திய அணி எளிதாக இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே இந்திய அணி தோல்வியை நோக்கி நகர்ந்தது.
இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா எவ்வளவோ போராடியும் இறுதியில் இந்திய அணி அடைந்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த உடனே இந்திய அணி தோல்வியை நோக்கி நகர்ந்ததாகவும் அவரது ஷாட் செலேச்சன் தனக்கு சர்ப்ரைஸ்ஸாக இருந்ததாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் பிராடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது உண்மையிலேயே ஒரு மோசமான ஷாட் தான். அதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் அவர் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அணியின் ரன் குவிப்பை வேகப்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவர். ஆனால் அவர் ஸ்டம்புக்கு வெளியில் வந்த பந்தை கட் அடிக்க நினைத்து ஆட்டமிழந்து விட்டார்.
இதுபோன்ற குறைந்த இலக்கினை சேசிங் செய்யும் போது எதிரணியில் சேவாக், வார்னர் போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்தால் அதிரடியான துவக்கத்தை கொடுத்து போட்டியின் சில மணி நேரங்களிலேயே அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு சென்று விடுவார்கள். அந்த வகையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அதிரடியான துவக்கத்தை அளிக்கக்கூடிய ஒரு அற்புதமான வீரர். ஆனால் அவர் டக் அவுட்டானதாலேயே இந்திய அணி அழுத்தத்திற்குள் மாட்டியது. ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறியதும் கருண் நாயர் பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விளையாடினார்.
இதையும் படிங்க : போட்டியின் பாதியில் அதை செய்ய நாங்க விரும்பல.. பண்ட் காயம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட – அசிஸ்டன்ட் கோச்
அப்படி அவர் ஆடும் போது இங்கிலாந்து அணி அட்டாக்கிங் ஃபீல்செட்டை அமைத்து இந்திய அணியை அழுத்தத்திற்குள் தள்ளியது. பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆனாலும் ஜெய்ஸ்வால் போன்ற ஒரு வீரர் மிடில் ஓவர்களில் ரன் குவிப்பை வேகப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான திறமை உள்ளவர் என அவரை பாராட்டி ஸ்டூவர்ட் பிராடு பேசியது குறிப்பிடத்தக்கது.