- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்தில் ரிஷப் பண்ட் மாதிரி நிறைய வீரர்களுக்கு அந்த மரியாதை கிடைக்காது.. ஸ்டுவர்ட் ப்ராட் பாராட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக மான்செஸ்டரில் இந்தியா விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடி வரும் இந்தியா முதல் நாள் முடிவில் 264/4 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு நல்லது துவக்கத்தைக் கொடுத்த ராகுல் 46, ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்தார்கள்.

கேப்டன் கில் 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 61 ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 37* ரன்கள் எடுத்திருந்த போது பாதத்தில் மிகப்பெரிய காயத்தைச் சந்தித்தார். அதனால் நடக்க முடியாமல் தடுமாறிய அவர் மிகுந்த வலியுடன் வண்டியில் ஏறி மைதானத்திலிருந்து வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

இங்கிலாந்தில் மரியாதை:

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு சிறப்பாக விளையாடும் ரிஷப் பண்ட் அதிரடியாக பேட்டிங் செய்யும் ஸ்டைலைக் கொண்டவர். அதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் அவருடைய ஆட்டத்தை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். இந்நிலையில் இங்கிலாந்தில் ஒவ்வொரு முறையும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வரும் போது உள்ளூர் ரசிகர்கள் கைதட்டி வரவேற்று மரியாதை கொடுப்பதாக அந்நாட்டின் ஜாம்பவான் ஸ்டுவர்ட் ப்ராட் பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் அது போன்ற வரவேற்பு நிறைய வெளிநாட்டு வீரர்களுக்கு கிடைக்காது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு வந்த பல வீரர்களில், ரிஷப் பண்ட் போல பேட்டிங் செய்வதற்காக ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் இவ்வளவு வரவேற்பு கிடைத்துப் பார்த்ததில்லை. ரசிகர்கள் பணம் கொடுத்து மைதானத்திற்கு இருக்கையில் அமர்கிறார்கள்”

- Advertisement -

ப்ராட் பாராட்டு:

“ரிஷப் பண்ட் வரும் போதும், செல்லும் போதும் அவருக்கு உற்சாக வரவேற்பைக் கொடுக்கிறார்கள். அவர் பார்ப்பதற்கும் வர்ணனை செய்வதற்கும் அற்புதமான வீரர். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர் நீங்கள் குறைவாக பவுலிங் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் உங்களுக்கு எதிராக அவர் தடுப்பாட்டத்தை விளையாடப் போகிறாரா? அல்லது இறங்கி வந்து நேராக அடிப்பாரா? என்பது தெரியாது”

இதையும் படிங்க: 9 சிக்ஸ்.. 157 ஸ்ட்ரைக் ரேட்டில் 64 பந்தில் 100.. 2001 ப்ரெண்டன் மெக்கல்லமை மிஞ்சிய ஆயுஷ்.. இரட்டை உலக சாதனை

“ஆனால் உலக கிரிக்கெட்டுக்கு அவர் மிகவும் சிறப்பான வீரர். அவர் வேகமாக குணமடைந்து வருவார் என்று நம்புகிறேன். இருப்பினும் அவருடைய பாதத்தில் பெரிய காயம் ஏற்பட்டது போல் தெரிகிறது. ஆனாலும் அவர் வீங்கிய கால்களுடன் வந்து விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்” என கூறினார். இதற்கிடையே ரிசப் பண்ட் எஞ்சிய ஆட்டத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்ற செய்திகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -