- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நானா இருந்தா இதை செஞ்சுருப்பேன்.. ஆஸி அம்பயரின் அநியாய தீர்ப்பு.. இந்தியாவுக்கு ஆதரவாக ப்ராட் பதிவு

ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதனுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ வென்ற நிலையில் இரண்டாவது போட்டி மெல்போர்ன் நகரில் நவம்பர் 7 முதல் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சுமாராக விளையாட விளையாடி 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு அதிகபட்சமாக மைக்கல் நீசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஹாரிஸ் 74 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டைகளை வீழ்த்தினார்.

- Advertisement -

அநியாய தீர்ப்பு:

பின்னர் விளையாடும் இந்தியா ஏ அணி இரண்டாவது நாள் முடிவில் 73-5 ரன்கள் எடுத்தது. களத்தில் துருவ் ஜுரல் 19*, நிதிஷ் ரெட்டி 9* ரன்களுடன் உள்ள நிலையில் 11 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஏ அணி போட்டியில் வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஹாரிஸ் 48 ரன்களில் இருந்த போது இந்திய வீரர் டானுஷ் கோட்டியான் வீசிய ஒரு பந்தை தடுக்க முயற்சித்தார்.

இருப்பினும் தரையில் பட்ட பந்து கொஞ்சம் திரும்பி அவருடைய பேட்டில் உரசிக் கொண்டே முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த இந்திய வீரர் படிக்கல் கைகளில் தஞ்சமடைந்தது. அதனால் விக்கெட் கிடைத்து விட்டதாக இந்திய அணியினர் கொண்டாடினர். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அம்பயர் கிரகாம் ஸ்மித் அது அவுட் இல்லை என்று அறிவித்தது இந்திய வீரர்களை ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைய வைத்தது.

- Advertisement -

ஸ்டுவர்ட் ப்ராட் ஆதரவு:

ஏனெனில் அவருடைய பேட்டில் உரசியது நன்றாக தெரிந்தது. அதைப் பார்த்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த வர்ணனையாளர்களும் அவுட் தான் என்று நேரலையில் சொன்னார்கள். இருப்பினும் இதற்கெல்லாம் அசையாத அம்பயர் கடைசி வரை இந்தியாவுக்கு அநியாய தீர்ப்பு வழங்கினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் அந்த வழியை தான் நானும் பாலோ பண்றேன் – வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சூரியகுமார்

அதைப் பார்த்து முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் “நானாக இருந்தால் நடந்து சென்றிருப்பேன்” என்று இந்தியாவுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதாவது அது தெளிவான அவுட் என்பதில் சந்தேகமில்லை என்று ப்ராட் கூறியுள்ளார். எனவே தாம் மார்க்கஸ் ஹாரிஸாக இருந்தால் அம்பயர் வழங்கிய தீர்ப்பையும் தாண்டி நேரமையுடன் பெவிலியன் திரும்பியிருப்பேன் என்று பிராட் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -