ரோஹித் சர்மாவின் அந்த வழியை தான் நானும் பாலோ பண்றேன் – வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சூரியகுமார்

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று நவம்பர் எட்டாம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து விட்டதால் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு தொடரை முற்றிலுமாக கைப்பற்றிய இந்திய அணியானது இந்த தென்னாப்பிரிக்க தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருந்து வருகிறது.

ரோஹித்தின் வழியை பின்பற்றுகிறேன் :

இந்நிலையில் இந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு முன் இன்று பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் வழியை பின்பற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விளையாட்டு பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது சகஜம் தான்.

- Advertisement -

எல்லோரும் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறார்கள். எனவே ஒவ்வொரு போட்டியிலும் நான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை வாழ்க்கையில் பேலன்ஸ் தான் முக்கியம். ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுகிறாரோ இல்லையோ ஒரு கேப்டனாக அவருடைய பண்புகள் எப்போதும் மாறியதில்லை. ரோகித் தன் வீரர்களிடம் எப்படி அணுகுவார் அவர்களை எப்படி கையாளுவார் என்பதை நான் அருகில் இருந்து சில ஆண்டுகள் பார்த்திருக்கிறேன்.

எனவே அவரது கேப்டன்சி பாதையை பின்பற்ற துவங்கி விட்டேன். நான் களத்தில் இருக்கும் போதும் சரி வெளியில் இருக்கும் போதும் சரி வீரர்களை எவ்வாறு கையாண்டு அவர்களிடம் இருந்து முழு திறனையும் வெளிக்கொணர வேண்டும் என்பதை கற்று வருகிறேன். ஒரு தலைவராக நாம் சக அணி வீரர்களிடம் நேரத்தை செலவழிக்க வேண்டியது முக்கியம்.

- Advertisement -

அதன் காரணமாகவே மைதானத்தில் விளையாடுவது தவிர்த்து வெளியிடங்களிலும் நான் அவர்களுடன் சாப்பிடுவது, நேரத்தை போக்குவது, பயணிப்பது என பலவற்றை செய்து வருகிறேன். ஒரு அணியின் ஒற்றுமைக்கு மிக முக்கிய காரணம் வீரர்கள் மற்றும் கேப்டன் ஆகியோர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை தான் என்று கருகிறேன். என்னை பொறுத்தவரை வீரர்களுடன் நான் அதிக நேரத்தை செலவிடும்போது அணியில் பிணைப்பு அதிகமாகும்.

இதையும் படிங்க : ஸ்டீவ் ஸ்மித்தால் நிச்சயம் இந்தியாவுக்கு அந்த தலைவலி இருக்கும் – கிளென் மேக்ஸ்வெல் கருத்து

அதோடு நான் அவர்களை புரிந்து கொள்ளவும் முடியும். இதன் காரணமாகவே நான் ரோகித் சர்மாவின் அந்த பாணியை பின்பற்றி வருகிறேன். தற்போது அணியில் உள்ள அனைத்து வீரர்களிடம் என்னுடைய உறவு மிக வலுவாக உள்ளது. எனவே நிச்சயம் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கருதுவதாக சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement