ஸ்டீவ் ஸ்மித்தால் நிச்சயம் இந்தியாவுக்கு அந்த தலைவலி இருக்கும் – கிளென் மேக்ஸ்வெல் கருத்து

Maxwell
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 22-ஆம் தேதி பர்த் நகரில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி நாளை மறுதினம் நவம்பர் 10-ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்து அங்கு பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. இந்த தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

ஸ்டீவ் ஸ்மிதா தான் இந்திய அணிக்கு தலைவலியா இருப்பார் :

அதே வேளையில் இன்னும் இந்த இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது இரு அணிகளுக்குமே முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல் :

இந்த இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியை உண்டாக்குவார் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

- Advertisement -

அவரது ஆட்டம் தற்போது மிகவும் பிரமாதமாக இருக்கிறது. முன்பை விட அவரது ஆட்டத்தில் தற்போது நுணுக்கங்கள் அதிகரித்துள்ளன. பல மணி நேரம் அவர் பயிற்சி செய்தும் திருப்தி அடையாமல் தனது செயல்பாட்டில் முன்னேற்றத்தை செய்து கொண்டே இருக்கிறார். ஒரு வீரர் இவ்வளவு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடும்போதே அவர் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன் என்பதை வெளிகாட்டுகிறார்.

இதையும் படிங்க : தோனி பேட்டிங் செய்ய உள்ளே வந்த போது மிரண்டு போயிட்டேன்.. சுவாரசிய தகவலை பகிர்ந்த – ஆஸி வீரர்

நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அவரது முழுமையான திறன் வெளிப்படும் என்பதனால் இந்திய அணி அவரை சமாளிக்க கடினப்படும் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார். தற்போது 35 வயதான ஸ்டீவ் ஸ்மித் 109 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதம், 41 அரைசதம் என 9,685 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement