கோலிக்கு எதிரா அந்த சின்னப்பையன் எப்படி பவுலிங் பண்ணப்போறாருன்னு பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் – ஸ்டூவர்ட் பிராட்

Broad
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது 10 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் எந்த அணி கோப்பையை கைப்பற்றப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் 15-ஆவது லீக் போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

- Advertisement -

பெங்களூர் மைதானம் அளவில் சிறியது என்பதனால் நிச்சயம் ஹைகோரிங் போட்டியாக இருக்கும் என்பதால் எந்த அணி வெற்றிபெறும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இரண்டாவதாக பெங்களூர் அணி பேட்டிங் செய்யும்போது விராட் கோலி மற்றும் லக்னோ வீரர் மாயங்க் யாதவ் மோதலை காண ஆர்வமாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏனெனில் மாயங்க் யாதவ் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்து வீசிய பவுலர் என்கிற சாதனையை நிகழ்த்திருக்கும் வேளையில் தொடர்ச்சியாக 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை அவர் பறக்க விடுவதால் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : 12 பந்தில் 5 சிக்ஸர்.. ஆர்சிபியை விளாசி மைதானத்துக்கு வெளியே மெகா சிக்ஸரை பறக்க விட்ட பூரான்.. அதிரடி சாதனை

அவருடைய வேகத்தில் விராட் கோலி எவ்வாறு விளையாடப் போகிறார் அவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் எவ்வாறு இருக்குப்போகிறது என்பதை காணவே ஆவலாக உள்ளதாக ஸ்டூவர்ட் பிராட் பேசியுள்ளார்.

Advertisement