IND vs ENG : அன்று யுவராஜ்.. இன்று பும்ரா.. ஒரே ஓவரில் மோசமான உலகசாதனைக்கு சொந்தக்காரரான – இங்கி வீரரின் அவலம்

Stuart Broad Yuvraj SIngh Jasprit bumrah
- Advertisement -

கடந்த 2021இல் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்தை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட போட்டி தற்போது பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 338/7 என்ற நல்ல நிலைமைக்கு போராடி வந்தது. ஏனெனில் சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என ஆரம்பத்திலேயே இந்தியா திணறியது.

அப்போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களைச் சேர்த்தனர். இதில் ஜடேஜா ஒருபுறம் மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் இங்கிலாந்து பவுலர்களை சரமாரியாக அடித்து விரைவாக ரன்களை சேர்த்தார். 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தியது.

- Advertisement -

ஜடேஜா அபாரம் – பும்ரா மாஸ்:
அதில் சரவெடியாக 89 பந்துகளில் சதமடித்த ரிஷப் பண்ட் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களில் ஆட்டமிழக்க முதல் நாள் முடிவில் மறுபுறம் நங்கூரமாக நின்ற ஜடேஜா 83* ரன்களில் களத்தில் இருந்தார். அதைத் தொடர்ந்து இன்று துவங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் 3 பவுண்டரியுடன் ஷமி 16 ரன்களில் போராடி ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று இந்தியாவை காப்பாற்றிய ரவீந்திர ஜடேஜா 13 பவுண்டரியுடன் வெளிநாட்டில் தனது முதல் சதத்தை அடித்து 104 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதை தொடர்ந்து இப்போட்டியில் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் ஜஸ்பிரித் பும்ரா அடுத்ததாக களமிறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை எப்படியாவது அவர் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி வந்த இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை பறக்க விட்டார். அதனால் பும்ராவுக்கு எதிராக பவுன்சரால் அச்சுறுத்த முயன்ற ஸ்டூவர்ட் பிராட் அடுத்தடுத்து 2 நோ-பால் வீசினார். அதற்காக அசராத பும்ரா பவுண்டரியும் சிக்சரும் பறக்க விட்டு 2, 3, 4 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் பவுண்டரிகளை தெறிக்கவிட்டு 5-வது பந்தில் மெகா சிக்சரை பறக்க விட்டு கடைசி பந்தில் சிங்கிள் எடுத்தார்.

- Advertisement -

மெகா உலகசாதனை:
அப்படி 4, 5, 7, 4, 4, 4, 6, 1 என ஒரே ஓவரில் 35 ரன்களை தெறிக்கவிட்ட ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற முரட்டுத்தனமான வரலாற்று உலக சாதனை படைத்தார். கடைசிவரை ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழக்காமல் 31* (16) ரன்கள் எடுக்க மறுபுறம் சிராஜ் ஆட்டமிழந்ததால் இறுதியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தால் கூட ஒரு ஓவருக்கு 20 – 30 ரன்கள் அடிப்பது கடினம். ஆனால் பேட்டிங் பற்றி பெரிதாக தெரியாமல் 10-வது இடத்தில் களமிறங்கிய பேட்ஸ்மேனாக தன்னை அச்சுறுத்த முயன்ற ப்ராட்க்கு தக்க பதிலடி கொடுத்த ஜஸ்பிரித் பும்ரா 35 ரன்களை பறக்கவிட்டு ஜாம்பவான் பிரையன் லாரா, ஜார்ஜ் பெய்லி, கேஷவ் மஹராஜ் (தலா 28 ரன்கள்) ஆகியோரது உலக சாதனையை முறியடித்து இந்த அபார சாதனை படைத்துள்ளது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

- Advertisement -

பரிதாப ப்ராட்:
அதைவிட இதனால் டெஸ்ட் மற்றும் டி20 என 2 வகையான கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய வள்ளல் பவுலராக ஸ்டூவர்ட் பிராட் பரிதாப சாதனையும் படைத்துள்ளார். கடந்த 2007இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வம்பிழுத்த ஆண்ட்ரூ பிளின்டாப்க்கு பலிகாடாக சிக்கிய ஸ்டூவர்ட் ப்ராடை பிரித்து மேய்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் பறக்க விட்டு உலக சாதனையை படைத்ததை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். அந்த நிலைமையில் இதை பார்த்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இது பும்ராவா – யுவராஜ் சிங்கா என்று கலகலப்புடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 550க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த தரமான பவுலராக கருதப்படும் ஸ்டுவர்ட் ப்ராட் தனது சொந்த மண்ணில் அதுவும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற 10-வது இடத்தில் களமிறங்கிய பேட்ஸ்மேனுக்கு எதிராக இத்தனை ரன்கள் கொடுத்து காலத்திற்கும் தனது பெயர் நிற்கும்படி மோசமான சாதனை புத்தகத்தில் மாபெரும் அவலத்தை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : விராட் கோலிக்கு இந்த விடயத்தில் சுத்தமா அதிர்ஷ்டம் இல்ல. அவரு பாவம் – க்ரீம் ஸ்வான் கருத்து

ஏனெனில் அதற்கு பின் டி20 கிரிக்கெட்டில் கைரன் பொல்லார்ட் இலங்கையில் அகிலா தனஞ்சயாவை 36 ரன்களை அடித்து சாதனை படைத்தாலும் அடித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 35 அடிப்பதெல்லாம் நூற்றாண்டில் ஒரு முறை கூட நடைபெறாத சம்பவமாகும். எனவே அவரின் கேரியரில் இது மிகப்பெரிய கருப்பு புள்ளியாக இருக்க போகிறது.

Advertisement