IND vs ENG : விராட் கோலிக்கு இந்த விடயத்தில் சுத்தமா அதிர்ஷ்டம் இல்ல. அவரு பாவம் – க்ரீம் ஸ்வான் கருத்து

Graeme-Swann-and-Virat-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது நான்கு போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்த வேளையில் ஐந்தாவது போட்டியானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு விராட் கோலியின் தலைமையில் இங்கிலாந்து பயணித்த இந்திய அணி அந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் தற்போது எஞ்சியுள்ள அந்த ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணி ரோகித் தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

INDvsENG

- Advertisement -

ஆனால் பயிற்சி போட்டியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ரோஹித் இந்த ஐந்தாவது போட்டியில் விளையாடவில்லை என்பதன் காரணமாக பும்ரா தலைமையில் இந்திய அணி இந்த ஐந்தாவது போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன் படி ஜூலை ஒன்றாம் தேதி நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இந்த போட்டி துவங்கியதும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. ஆனால் இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி 11 ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலி இந்த போட்டியிலாவது அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Kohli

ஆனால் இம்முறையும் விராட் கோலி முதல் இன்னிங்சில் 11 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதோடு இங்கிலாந்து பந்து வீச்சாளர் போட்ஸ் வீசிய பந்தினை விக்கெட் கீப்பிரிடம் விடுவதற்காக பேட்டை தூக்கிய போது பந்து எட்ஜ் ஆகி போல்டில் பட்டது. இதனை எதிர்பார்க்காத விராத் கோலி மிகுந்த ஏமாற்றத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரீம் ஸ்வான் கூறுகையில் : விராட் கோலி நிதானமாகவே விளையாட துவங்கினார். களத்தில் தன்னை நிலை நிறுத்த கொள்வதற்கும் அவர் முயன்றார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக பந்து எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தது வருத்தமாக இருந்தது. என்னை கேட்டால் இந்த ஆட்டத்தில் அவருக்கு பெரிய ரன் அடிக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூறுவேன்.

இதையும் படிங்க : IND vs ENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் லாராவின் உலக சாதனையை உடைத்த பும்ரா. நம்பமுடியலயா? – படிங்க புரியும்

அதனால்தான் இப்படி ஆட்டம் இழந்து வெளியேறுகிறார். ஆனால் விராட் கோலி இதை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை. களத்தில் கொஞ்ச நேரம் தன்னை நிலைநிறுத்தி விளையாடி ரன் சேர்க்க முயன்றால் நிச்சயம் ரன்களை குவிப்பார் இந்த இன்னிங்ஸில் அவர் ஆட்டம் இழந்து பரிதாபமாக வெளியேறியதை நான் பார்த்துக் கொண்டே தான் இருந்தேன் என ஆண்குறியை குறிப்பிடத்தக்கது.

Advertisement