டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கு அது முக்கியமல்ல, தடவலாக பேட்டிங் செய்வதற்கான காரணத்தை விளக்கும் கேஎல் ராகுல்

Rahul
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறினாலும் 2019 வாக்கில் ஐபிஎல் தொடரிலும் இந்திய அணிக்காகவும் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் அடுத்த தலைமுறை கேப்டனாக பிசிசிஐ உருவாக்க நினைத்த அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலமான எண்ணத்துடன் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் நிறைய பெரிய ரன்களை எடுத்தாலும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார்.

அதனாலேயே 2019, 2020, 2021, 2022 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தும் அவர் விளையாடிய பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதனால் இவர் ஆரஞ்சு தொப்பிக்காக விளையாடும் “தடவல் நாயகன்” என்று நிறைய ரசிகர்கள் புள்ளி விவரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் கலாய்த்தனர். பொதுவாக டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் வெற்றி பெறுவதற்கு அதிரடி சரவெடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவிப்பதே வெற்றிக்கான ரகசியம் என்று சொல்வார்கள்.

- Advertisement -

தடவல் நாயகன்:
அதாவது டி20 கிரிக்கெட்டில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பதை விட 20 பந்துகளில் 40 ரன்கள் எடுப்பது வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனமாகும். ஆனால் ஸ்ட்ரைக் ரேட் என்பது தம்மை பொறுத்த வரை தேவையற்றது என்று பேட்டி கொடுத்த கேஎல் ராகுல் சூழ்நிலைகேற்றார் போல் விளையாடினால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் வெற்றி காண முடியும் என்ற புதிய விளக்கத்தை கொடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதை தொடர்ந்து 2022 ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் ஃபார்மை இழந்த அவர் அதே கோட்பாட்டுடன் தடவலாக பேட்டிங் செய்தது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் 90% இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்களின் விமர்சனங்களை சந்தித்த அவர் தற்போது இந்திய அணியில் துணை கேப்டன்ஷிப் பதவியையும் நிரந்தரமான இடத்தையும் இழந்துள்ளார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகைப்படுத்தப்பட்டது அதாவது ஓவர் ரேட்டட் என்று மீண்டும் தெரிவிக்கும் கேஎல் ராகுல் சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடினால் தான் வெற்றி காண முடியும் என்ற தனது கருத்தை மீண்டும் ஆழமாக பேட்டி கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதாவது அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுப்பதை விட சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடுவதை வெற்றியை கொடுக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி லக்னோ அணியின் புதிய ஜெர்சி வெளியிட்டு விழாவில் பேசியது பின்வருமாறு. “என்ன கேட்டால் ஸ்ட்ரைக் ரேட் என்பது ஓவர் ரேட்டட் என்று நினைக்கிறேன். அது சூழ்நிலையின் தேவைக்கேற்ப அவசியமானதாகும். அதாவது நீங்கள் வெறும் 140 ரன்களை மட்டும் சேசிங் செய்யும் போது 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. அது தற்போது போட்டியில் என்ன சூழ்நிலை இருக்கிறதோ அதை பொருத்தது. தங்கள் இயல்பான விளையாட்டை விளையாட ஊக்குவிக்கப்படும் சில வீரர்கள் இருக்கின்றனர். சில வீரர்கள் அணி எதிர்பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்”

“ஸ்ட்ரைக் ரேட் என்பது அன்றைய நாளில் அந்த சூழ்நிலையில் களத்தில் இருக்கும் 2 பேட்ஸ்மேன்கள் அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து வெளிப்படுத்த வேண்டிய ஒன்றாகும்” என்று கூறினார். அதை பார்க்கும் ரசிகர்கள் இந்த எண்ணத்தால் தான் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறீர்களா என்று கிண்டலடிக்கிறார்கள்.

இதையும் படிங்க:வீடியோ : இதுக்கு பழசே பரவால்ல, 2023 சீசனுக்காக லக்னோ வெளியிட்ட புதிய ஜெர்ஸி இதோ – எப்படி இருக்கு சொல்லுங்க?

ஏனெனில் இந்த எண்ணத்துடன் விளையாடி வரும் அவர் கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் முறையே 593, 670, 626, 616 என தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய ரன்களை எடுத்தார். ஆனால் முறையே 135.38, 129.24, 138.80, 135.38 என அந்த 4 சீசன்களிலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அந்த ரன்கள் அவருடைய அணிக்கு உபயோகமில்லாமல் கோப்பையை வெல்ல பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement