அங்க வந்தா உங்கள கல்லாலேயே அடிப்பாங்க.. ஷாகிப்பை வெளிப்படையாக எச்சரித்த ஏஞ்சலோ மேத்யூஸ் சகோதரர்

Travin Mathews
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 145 வருட சர்வதேச கிரிக்கெட்டில் காலதாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாபத்திற்குள்ளானது பெரிய சர்ச்சையாக மாறியது. அதாவது அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த மேத்யூஸ் கடைசி நேரத்தில் தம்முடைய ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்தார்.

அதனால் புதிய ஹெல்மெட்டை தமது அணியிடமிருந்து அவர் வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் காலதாமதம் செய்து விட்டதாக நடுவர்களிடம் புகார் கொடுத்த வங்கதேச அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தலாக கேட்டுக் கொண்டனர். அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அதற்கடுத்த பேட்ஸ்மேன் அடுத்த 2 நிமிடத்திற்குள் வந்து பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை மேத்யூஸ் மீறியதால் அவுட் கொடுத்தார்கள்.

- Advertisement -

கல்லால் அடிப்பாங்க:
அதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் தாம் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் நிலைமையை எடுத்துரைத்தும் வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் நேர்மைத்தன்மையை பற்றி யோசிக்காமல் மனசாட்சியின்றி அவுட்டை வாபஸ் பெறாதது ரசிகர்களை கோபமடைய வைத்தது. அதைத்தொடர்ந்து பந்து வீச்சில் ஷாகிப்பை அவுட்டாக்கிய போது நேரமாச்சு சீக்கிரம் கிளம்புங்க என்று மேத்யூ பதிலடி கொடுத்து பழி தீர்த்தார்.

அத்துடன் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொள்ளாமல் பகையுடன் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் மன்கட் செய்வதை விட இப்படி ஒரு அவமானமான செயலை செய்த ஷாகிப் மற்றும் வங்கதேசம் மீதிருந்த மரியாதை போய்விட்டதாக போட்டியின் முடிவில் மேத்யூஸ் விமர்சித்தார்.

- Advertisement -

மேலும் 2 நிமிடத்திற்குள் தாம் களத்திற்குள் வந்த வீடியோ ஆதாரத்தை ஐசிசியிடம் சமர்ப்பித்துள்ள அவர் நடுவர்கள் தமக்கு எதிராக வழங்கிய தீர்ப்புக்கு நியாயம் கேட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த வருடம் இலங்கை பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக தங்கள் நாட்டுக்கு வந்தால் ஷாகிப்பை இலங்கை அணி ரசிகர்கள் கல்லால் அடிப்பார்கள் என்று ஏஞ்சலோ மேத்யூஸ் சகோதரர் ட்ரெவின் மேத்யூஸ் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: செமி ஃபைனலில் இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் வந்தாலும் அது நடக்காது.. கைஃப் வெளிப்படை

இது பற்றி டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் வங்கதேச கேப்டன் நேர்மை தன்மையையும் மனிதாபிமானத்தையும் காட்டவில்லை. அதனால் ஷாகிப்பை இலங்கை வரவேற்கவில்லை. வருங்காலங்களில் எல்பிஎல் அல்லது சர்வதேச போட்டிகளுக்காக இலங்கைக்கு விளையாட வந்தால் அவர் மீது கற்கள் பாயும் அல்லது ரசிகர்களிடம் மோசமான நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்ள நேரிடலாம்” என்று கூறினார்.

Advertisement