நோட் பண்ணிக்கோங்க. இந்த 2 அணிகள் தான் உலககோப்பை பைனல்ல மோதும் – பென் ஸ்டோக்ஸ் கணிப்பு

Stokes
Advertisement

கடந்த அக்டோபர் 17-ம் தேதி துவங்கிய ஏழாவது டி20 உலக கோப்பை தொடரானது தற்போது சூப்பர் 12-சுற்றின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றன. இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும். அரை இறுதியில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்ற தங்களது போராட்டத்தை அளிக்க உள்ளது.

Cup

இந்த சூப்பர் 12-சுற்றில் தற்போது ஒரு சில அணிகள் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் 2 அணிகள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்தினை அளித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொண்ட இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடும் இரு அணிகள் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதும் என எதிர்பார்க்கிறேன்.

pakvseng

ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே அவர்கள் எவ்வளவு பெரிய அணிகள் என்பதை நிரூபித்து விட்டனர். மேலும் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்ற இந்த இரு அணிகளும் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். மேலும் இவர்கள் எளிதில் அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் தகுதியுள்ளது. நிச்சயம் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதையும் படிங்க : யார் என்ன சொன்னாலும் கோலி கேக்குறதா இல்ல. இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இரு அணிகளிலுமே நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருப்பதனால் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி எது என்பதை காண ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார். குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது ஏற்கனவே பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்ததால் இனிவரும் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement