யார் என்ன சொன்னாலும் கோலி கேக்குறதா இல்ல. இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Kohli

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளனர். இதன்காரணமாக மோசமான விமர்சனங்களை இந்திய அணியும், வீரர்களும் சந்தித்தனர்.

varun

அதனைத் தொடர்ந்து தங்களது இரண்டாவது லீக் போட்டியில் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும் அணியில் சில மாற்றங்களை செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இன்றைய நியூசிலாந்து போட்டிக்கான அணியில் கேப்டன் கோலி எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய அதே அணியே இன்றைய போட்டியிலும் விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது.

shami

மேலும் ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா பவுலிங் பயிற்சி செய்து வருவதால் இன்றைய போட்டியில் பந்து வீசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் நிகழாது என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ : :

- Advertisement -

1) ரோஹித் சர்மா, 2) கே.எல்.ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) புவனேஷ்வர் குமார், 9) முகமது ஷமி, 10) வருண் சக்ரவர்த்தி, 11) பும்ரா

Advertisement