WTC Final : 5 சதங்களை அடிச்ச அவர் விளையாடாதது நம்ப முடியல, இந்தியா தெரிஞ்சே தப்பு பண்ணிட்டாங்க – ஸ்டீவ் வாக் அதிருப்தி

Steve-Waugh
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 196 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

சொல்லப்போனால் ரோகித் சர்மா 15, கில் 13, புஜாரா 14, விராட் கோலி 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 200 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 48, அஜிங்க்ய ரகானே 89, சர்துள் தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆனை தவிர்க்க உதவினர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 123/4 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் வாக் அதிருப்தி:
அந்த அணிக்கு களத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 41* ரன்களுடன் சவாலை கொடுக்கும் நிலையில் மொத்தமாக 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு உமேஷ் யதாவை 4வது பவுலராக தேர்வு செய்த ரோஹித் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Ashwin

குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான கடந்த ஃபைனலில் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் ஒன்றாக தேர்வு செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் இப்போட்டி நடைபெறும் ஓவல் நூற்றாண்டுக்கும் மேலாக சுழலுக்கு சாதகமாக வருவதால் அந்த இருவரையுமே தேர்வு செய்ய வேண்டுமென சச்சின், பாண்டிங் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

ஆனாலும் அதைக் கேட்காமல் புதிய முடிவை எடுத்த ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தவறு செய்து விட்டதாக பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் ரசிகர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்த பவுலராக உலக சாதனை படைத்துள்ள அஸ்வின் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கவாஜா, ஹெட், அலெக்ஸ் கேரி ஆகிய டாப் 7இல் இருக்கும் 5 இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்திருப்பார் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

Ashwin 2

அதற்கேற்றார் போல் இப்போட்டியில் இந்திய அணியில் இருக்கும் ஒரே ஒரு இடது கை பேட்ஸ்மேனான ரவீந்திர ஜடேஜாவை வீசிய 8வது பந்திலேயே அதுவும் பேட்டிங்க்கு சாதகமான 2வது நாளில் ஆஸ்திரேலியாவின் ஒரே ஒரு ஸ்பின்னரான நேத்தன் லயன் அவுட்டாக்கினார். அதிலிருந்து அந்த முடிவு இந்தியாவுக்கு கடைசி 2 நாட்களில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தாமாக இருந்தால் 5 சதங்களை அடித்து ஐசிசி ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் அஸ்வினை பேட்டிங்கிற்காகவே தேர்ந்தெடுத்திருப்பேன் என முன்னாள் ஜாம்பவான் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வாக் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பவுலிங்கை விட்டு விட்டு பேட்டிங்கிற்காகவே அஸ்வினை நான் தேர்வு செய்திருப்பேன். குறிப்பாக ஏற்கனவே 5 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள அவர் இப்போட்டியில் விளையாடவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது வேடிக்கையான முடிவாக இருக்கிறது. நீங்கள் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் பச்சை புற்களுடன் கூடிய பிட்ச் எல்லாவற்றையும் செய்யும் என்று நினைக்கிறீர்கள்”

Steve-Waugh

இதையும் படிங்க: ஐ.சி.சி கோப்பைகளை ஜெயிக்கணுனா அந்த பயத்தை மொதல்ல விடுங்க. அட்வைஸ் வழங்கிய – ஹர்பஜன் சிங்

“ஆனால் ஓவல் பிட்ச் பச்சை புற்களுடன் இருந்தாலும் சற்று காய்ந்துள்ளது. குறிப்பாக சூரியன் வந்ததும் அது மிகவும் காய்ந்து முற்றிலும் வேறுபட்ட பிட்ச்சாக மாறிவிடும். அதனால் இப்போட்டியில் இந்தியா தவறான அணியை தேர்வு செய்துள்ளது என்று நினைக்கிறேன். ஏனெனில் இப்போட்டியின் கடைசி பகுதிகளில் சுழல் மேலும் கீழும் சென்று பெரிய வேலையை செய்யும்” என்று கூறினார்.

Advertisement