ஐ.சி.சி கோப்பைகளை ஜெயிக்கணுனா அந்த பயத்தை மொதல்ல விடுங்க. அட்வைஸ் வழங்கிய – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது தற்போது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 7-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

Rohit

- Advertisement -

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய அணி பலமுறை சிறப்பாக விளையாடியும் நாக் அவுட் போட்டிகளில் தோற்றுவருகிறது. இவ்வேளையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் கைவிட்டுவிடுமோ என்ற நிலையே தற்போது உள்ளது.

ஏனெனில் இந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 296 ரன்களை மட்டுமே குவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 173 ரன்கள் முன்னிலையுடன் தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

Shami

இந்நிலையில் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை கைப்பற்ற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை ஒன்றினை வழங்கி உள்ளார். அதன் படி அவர் கூறுகையில் : இது போன்ற உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் போது மன உறுதியும், தைரியமும் அவசியம்.

- Advertisement -

நம்முடைய வீரர்களின் திறனில் குறை இல்லை. ஆனால் பெரிய கோப்பைகளுக்கான இது போன்ற போட்டிகளில் விளையாடும் போது பயமோ, கவலையோ இன்றி விளையாட பழக வேண்டும். அப்பொழுதுதான் அழுத்தத்தில் இருந்து விடுபட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக விளையாட வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : WTC Final : ஆட்டமிழந்ததும் நேரடியாக சாப்பிட சென்ற விராட் கோலி. கிண்டல் செய்த ரசிகர்கள் – விராட் கோலி கொடுத்த பதிலடி

அப்போதுதான் அவர்களது இயல்பான ஆட்டம் வெளிப்படும். தோல்வி அடைந்தால் அணியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்ற பயம் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினால் பெரிய போட்டிகளில் சாதிக்கலாம் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement