- Advertisement -
உலக கிரிக்கெட்

விராட் கோலி சொன்ன மாதிரி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இப்படி மாத்துங்க.. ஐசிசி’க்கு ஸ்மித் கோரிக்கை

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதகின்றன. அதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா ஐசிசி தொடர்களில் எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடிய அணியாக கருதப்படுகிறது.

எனவே இம்முறையும் அந்த அணி கோப்பையை வெல்லும் என்பது பலரது கணிப்பாக இருக்கிறது. மறுபுறம் தென் ஆப்பிரிக்கா ஐசிசி தொடர்களில் தடுமாறக்கூடிய அணியாக வலம் வருகிறது. அதனால் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இம்முறை தென்னாபிரிக்கா மோசமான வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகளாக நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

- Advertisement -

ஸ்மித் கோரிக்கை:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணி எப்படிப்பட்டது என்பது எனக்கு தெரியும். கடந்த ஒரு வாரமாக நாங்கள் இங்கே மிகவும் கடினமாக பயிற்சிகளை எடுத்து வருகிறோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல இடத்தில் இருப்பதாக உணர்கிறார்கள். நாங்கள் மற்றுமொரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்காக உற்சாகத்துடன் இருக்கிறோம்”

“கடந்த தொடரை பற்றிய நினைவு எனக்கு நினைவு வருகிறது. தற்போது பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடக்கூடிய இடத்தில் ஃபைனல் நடக்கிறது. தென்னாப்பிரிக்காவை எழுதிப் போட்டியில் எதிர்கொள்வது சிறந்த சவால். இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டுக் பந்துகள் நாங்கள் சாதாரணமாக விளையாடும் பந்துகளை விட வித்தியாசமானது”

- Advertisement -

விராட் கோலி போல:

“அதில் நாங்கள் விளையாடுவதற்காக உற்சாகத்துடன் இருக்கிறோம். ஃபைனல் பற்றி நான் அதிகமாக சிந்திக்கவில்லை. ஆனால் அது 3 போட்டிகள் கொண்ட தொடராக நடந்தால் நன்றாக இருக்கும். அது போன்ற தொடரை அடுத்த கேலண்டரில் நடத்துவதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஏற்கனவே சர்வதேச அட்டவணையில் அனைத்து போட்டிகளும் நெருக்கமாக இருக்கிறது. அதையும் தாண்டி 3 போட்டிகளாக நடத்தினால் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: டீம்ல பும்ரா இருக்கும் போது அந்த கம்பேரிசனே இருக்கக்கூடாது.. தனது சீனியரை பாராட்டிய – அர்ஷ்தீப் சிங்

முன்னதாக 2021ஆம் ஆண்டு நியூஸிலாந்திடம் தோல்வியை சந்தித்த பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை 3 போட்டிகளாக நடத்த வேண்டும் என்று அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டார். அப்போது தான் ஒரு போட்டியில் தோற்றாலும் அடுத்த 2 போட்டிகளில் கம்பேக் கொடுத்து வெல்ல முடியும் என்று அவர் சொன்ன கருத்தை 2023 தோல்விக்குப்பின் ரோஹித் சர்மாவும் தெரிவித்திருந்தார். தற்போது அதே கருத்தை ஸ்மித் ஐசிசி’க்கு கோரிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -