டீம்ல பும்ரா இருக்கும் போது அந்த கம்பேரிசனே இருக்கக்கூடாது.. தனது சீனியரை பாராட்டிய – அர்ஷ்தீப் சிங்

Arshdeep Singh
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்த வேளையில் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் அனுபவ வீரர்கள் இல்லாமல் இம்முறை முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்க இருக்கிறது.

பும்ரா டீம்ல இருக்கும்போது கம்பேரிசனே இருக்கக்கூடாது : அர்ஷ்தீப் சிங்

இதன்காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள அர்ஷ்தீப் சிங் அங்கு தாங்கள் பயிற்சி பெறும் விதம் குறித்தும், இந்திய அணியின் சீனியர் வீரரான ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் பிசிசிஐ ஏற்பாடு செய்த பிரத்யேக நேர்காணலில் அர்ஷ்தீப் சிங் கூறியதாவது : நான் எப்போதெல்லாம் கையில் பந்தை வைத்திருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் தான் சிறந்த பந்துவீச்சாளர் என்று நினைப்பேன். ஆனால் நமது அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற ஒரு வீரர் இருக்கும்போது அந்த ஒப்பீடே இருக்கக் கூடாது. ஏனெனில் ஜஸ்ப்ரீத் பும்ராவை விட சிறந்த பந்துவீச்சாளர் யாரும் இருக்க முடியாது.

எனவே அவரை நான் பார்க்கும் போதெல்லாம் என்னுடைய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எப்படியாவது அவரை போன்று சிறந்த பந்துவீச்சாளராக மாற வேண்டும் என்று மட்டுமே நினைத்து கடுமையாக உழைத்து வருகிறேன். இந்த இங்கிலாந்து தொடருக்காக அவருடன் இணைந்து வலைப்பயிற்சியில் பந்து வீசுவது மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த பயிற்சியின்போது நான் நமது அணியின் பல்வேறு பேட்டர்களுக்கு பந்துவீசி வருகிறேன். குறிப்பாக நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோருக்கு எதிராக பந்துவீசுவது சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

சாய் சுதர்சன் முதல்முறை தான் இந்திய அணியில் இணைந்துள்ளார் என்றாலும் அவர் நல்ல பேட்டிங்கை வலைப்பயிற்சியில் வெளிப்படுத்துகிறார். அதன்மூலம் அவர் நல்ல டச்சில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. எதிர்வரும் இந்த தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பல கோடி மனங்களை கவர்ந்தவர்.. அவருக்கு இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி.. தல தோனியை வாழத்திய – சின்னதல ரெய்னா

இந்திய அணிக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகமான அர்ஷ்தீப் சிங் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளையும், 63 டி20 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் விளையாடியிருந்தாலும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement