பல கோடி மனங்களை கவர்ந்தவர்.. அவருக்கு இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி.. தல தோனியை வாழத்திய – சின்னதல ரெய்னா

Raina and Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். அதுமட்டும் இன்றி கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அவருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில் ஹால் ஆஃப் பேம் விருதினை வழங்கி கௌரவித்தது.

தல தோனியை வாழ்த்திய சுரேஷ் ரெய்னா :

ஏற்கனவே இந்திய அணி சார்பாக 10 வீரர்கள் இந்த பெருமையை பெற்றிருந்த வேளையில் 11-வது வீரராக தோனி இடம் பெற்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தோனிக்கு இந்த சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ரெய்னா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ஹால் ஆஃப் ஃபேம் விருதினை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மனதார வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

எம்.எஸ் தோனி என்கிற லெஜன்ட் தற்போது ஐசிசி சிறப்பு ஹாலில் நுழைந்துள்ளார். அவருடைய கரியர் நம்ப முடியாத ஒன்று. இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். அவரது இந்த பங்களிப்பின் காரணமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு முழு தகுதியான நபர் தோனி என்று நினைக்கிறேன்.

- Advertisement -

போட்டிகளை மிகச் சிறப்பாக முடித்துக் கொடுப்பதிலும் சரி, கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தியதும் சரி அனைத்து துறைகளிலுமே அழிக்க முடியாத தடத்தை தோனி விட்டு சென்றுள்ளார். அவருடைய அணுகுமுறை மற்றும் முடிவுகள் இந்திய அணியை வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. பல கோடி ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக தோனி இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க : உங்கள நம்ப முடியாது.. 40 வயசாயிடும்.. ரோஹித் சர்மா விடயத்தில் முக்கிய முடிவை எடுக்க – பி.சி.சி.ஐ திட்டம்

என்னை பொறுத்தவரை அவர் ஒரு உண்மையான வீரரின் அடையாளம். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக அவரை நான் பார்க்கிறேன். அவருடைய லெகசி இனிவரும் வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என்று ரெய்னா அவரை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement