WTC Final : டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அந்த 2 இந்திய வீரர்கள் தான் எங்களுக்கு ஆபத்தாக இருப்பார்கள் – ஸ்டீவ் ஸ்மித்

Steve-Smith
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஏற்கனவே விராட் கோலி தலைமையில் நியூசிலாந்து அணியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்த இந்திய அணியானது இம்முறை ரோகித் சர்மாவின் தலைமையில் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் காத்திருக்கிறது.

IND vs AUS

- Advertisement -

அதோடு கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு எந்தவித ஐசிசி கோப்பையும் கைப்பற்றாமல் இருக்கும் இந்திய அணிக்கு இம்முறை அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி ஜூன் 7-ம் தேதி துவங்கும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்று அடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடருக்கு பின்னர் தற்போது நடைபெறவுள்ள இந்த போட்டியானது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியும் தற்போது இங்கிலாந்து சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களாலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அப்படி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வேளையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியவர்களை எதிர்கொள்வதில் நிச்சயம் சவால் இருக்கும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சார்களாலும் மிகச் சிறப்பாக பந்துவீச முடியும் என்பதால் இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியான இறுதிப் போட்டியை இங்கு நடைபெறுவது தான் சரியான இடமாக இருக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரான ரசித் கானை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக எதிர்கொண்ட 3 போட்டிகள்

இந்திய அணியின் முன்னணி வீரர்களான பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிவுள்ள நிலையில் இந்த இறுதி போட்டியில் இந்திய அணி எவ்வாறு ஆஸ்திரேலிய அணியை சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement