IPL 2023 : உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரான ரசித் கானை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக எதிர்கொண்ட 3 போட்டிகள்

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. குறிப்பாக நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிராக அதன் கோட்டையான அகமதாபாத்தில் மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் இலக்கை துரத்திய சென்னைக்கு மோஹித் சர்மா கடைசி ஓவரில் முழுமூச்சுடன் போராடியும் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரையும் பவுண்டரியையும் பறக்க விட்ட ஜடேஜா த்ரில் வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றிக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, ரகானே 27, ராயுடு 19 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து முக்கிய பங்காற்றினர்.

இருப்பினும் ஆரம்பத்தில் தடுமாறிய சிவம் துபே 12வது ஓவரில் ரசித் கான் வீசிய கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு 32* ரன்கள் எடுத்தது போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த அவர் உலகம் முழுவதிலும் நடைபெறும் அனைத்து வகையான டி20 தொடர்களில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்து இந்த வயதிலேயே டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவானாகவும் நம்பர் ஒன் பவுலராகவும் அனைவராலும் போற்றப்படுகிறார்.

- Advertisement -

அதனால் அவரை அதிரடியாக அடிப்பதற்கு விராட் கோலி முதல் ஜோஸ் பட்லர் வரை உலகின் 90% பேட்ஸ்மேன்கள் யோசித்து தடுமாறி அவுட்டாவது வழக்கமாகும். ஆனால் முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் சொல்வது போல் ரசித் கானுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட வேண்டுமெனில் அவருக்கு பயப்படாமல் தில்லுக்கு துட்டாக தைரியமாக பேட்டிங் செய்ய வேண்டும். அந்த வகையான பேட்டிங்கை சிவம் துபே போலே இதற்கு முன் 3 சென்னை பேட்ஸ்மேன்கள் செய்து காட்டியுள்ளனர். அதை பற்றி பார்ப்போம்:

3. ருதுராஜ் கைக்வாட்: இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு 60 (44) ரன்கள் ருதுராஜ் 172/7 ரன்கள் எடுக்க உதவி இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அப்போட்டியில் பேட்டிங் சவாலான பிட்ச்சில் நன்கு செட்டிலான அவர் பவர் பிளே முடிந்ததும் வந்த ரசித் கானின் முதல் ஓவரிலேயே எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் சிக்சராக பறக்க விட்டு அடுத்த பந்தில் தேர்ட் மேன் திசையில் பவுண்டரியை அடித்து அசத்தினார்.

- Advertisement -

அத்துடன் 18வது ஓவரில் ராயுடு 1 சிக்ஸர் அடித்து கடைசி பந்தில் 17 (9) ரன்களில் அவுட்டானார். அதனால் அந்த போட்டியில் 4 ஓவரில் 37 ரன்களை 9.25 என்ற எக்கனாமியில் ரசித் கான் சுமாராகவே செயல்பட்டு குஜராத்தின் வெற்றியில் பங்காற்றவில்லை.

2. அம்பத்தி ராயுடு: 2018 சீசனில் ஹைதராபாத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற முக்கிய போட்டியில் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய ரசித் கான் தொடக்க வீரர் டு பிளேஸிஸை அவுட்டாக்கியதால் சென்னை 32/2 என தடுமாறியது.

- Advertisement -

ஆனால் அடுத்ததாக வந்த ராயுடு அவரை இறங்கி இறங்கி அடித்து தைரியமாக பேட்டிங் செய்து விரைவாக ரன்களை சேர்த்ததால் 20 ஓவர்களில் சென்னை 182/3 ரன்கள் குவித்தது. அப்படி ராயுடுவிடம் அடி வாங்கியது உட்பட அந்த போட்டியில் ரசித் கான் 4 ஓவரில் 49 ரன்களை கொடுத்து ஹைதராபாத்தின் தோல்விக்கு காரணமாகும் வகையில் செயல்பட்டார்.

1. ஷேன் வாட்சன்: ஐபிஎல் தொடரில் ரசித் கானை தெறிக்க விட்ட ஒருவர் என்றால் அது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வாட்சன் என்று சொல்லலாம். குறிப்பாக 2019 சீசனின் ஒரு போட்டியில் மனிஷ் பாண்டே 83 ரன்கள் குவித்த உதவியுடன் ஹைதராபாத் 175/3 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய சென்னைக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே தடுமாறிய வாட்சன் மெய்டன் பதிவு செய்தார்.

இதையும் படிங்க:IPL 2023 : சாதனை கனவு அணி முக்கியமல்ல, கப்பு தான் முக்கியம் பிகிலு – சிஎஸ்கே வீரர் மாஸ் பதிலடி, நடந்தது என்ன

அதை தொடர்ந்து பந்து வீச வந்த ரசித் கான் “உலகின் நம்பர் ஒன் பவுலரான என்கிட்ட வெச்சுக்காதீங்க” என்ற வகையில் முறைத்தார். அப்போது அமைதியாக சென்ற வாட்சன் அதே ஓவரிலேயே ரசித் கானை பந்தாடியதை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த வகையில் அந்த போட்டியிலும் 44 ரன்கள் வழங்கிய அவர் ஹைதராபாத் வெற்றியில் பங்காற்றவில்லை.

Advertisement