IPL 2023 : கனவு அணில இடம் பிடிக்கிறது முக்கியமல்ல, கப்பு தான் முக்கியம் பிகிலு – சிஎஸ்கே வீரர் மாஸ் பதிலடி, நடந்தது என்ன

CSK Dream 11
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 தொடர் கடந்த 2 மாதங்களாக பரபரப்பான போட்டிகளுடன் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் குஜராத்தை அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் தோற்கடித்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பின்னடைவுக்குள்ளான அந்த அணி இம்முறை புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்க்காது என ஜேக் காலிஸ் முதல் மித்தாலி ராஜ் வரை 12 முன்னாள் கிரிக்கட்டர்கள் ஆரம்பத்திலேயே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கணித்தனர்.

அந்த நிலையில் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்ற சென்னை களமிறங்கிய 14 சீசன்களில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று 10வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அது போக மாபெரும் ஃபைனலில் தங்களுடைய கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் ஆரஞ்சு தொப்பியை வென்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் மற்றும் ஊதா தொப்பி பட்டியலில் டாப் 3 இடங்களைப் பிடித்த முகமது ஷமி, ரசித் கான், மோஹித் சர்மா ஆகியோரை கொண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தான் வெல்லும் என்று பெரும்பாலானவர்கள் கணித்தனர்.

- Advertisement -

கப் முக்கியம் பிகிலு:
சொல்லப்போனால் தோனி மேஜிக் இல்லாமல் போனால் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு கூட வந்திருக்காது என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ஃபைனலுக்கு முந்தைய நாளில் பேசினார். ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய சென்னை மாபெரும் ஃபைனலில் மோகித் சர்மாவின் போராட்டத்தையும் தாண்டி ரவீந்திர ஜடேஜாவின் அபாரமான ஃபினிஷிங்கால் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது.

இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட கனவு அணியை பிரபல ஈஎஸ்பிஎன்க்ரிக்இன்போ இணையம் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த தொடரில் 1 முதல் 11வது இடம் வரை ஒவ்வொரு இடத்திலும் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்களை கொண்ட 11 பேர் அணியை அந்த இணையம் வெளியிட்டது. அதில் சுப்மன் கில், பஃப் டு பிளேஸிஸ், கேமரூன் கிரீன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹென்றிச் க்ளாஸென், ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா, ரசித் கான், முகமது ஷமி, மோஹித் சர்மா என 11 வீரர்களில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சார்பில் ஜடேஜா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

மற்றபடி பெரும்பாலும் ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பட்டியலில் டாப் இடங்களை பிடித்த வீரர்களே எஞ்சிய 10 வீரர்களாக உள்ளனர். ஆனால் இது கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு என்பதும் அதில் 11 பேரும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும் என்ற கூற்றுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அணியில் இடம் பிடித்துள்ள இதர 10 வீரர்கள் விளையாடி அணிகளில் அவர்களை தவிர்த்து எஞ்சிய வீரர்கள் இணைந்து அசத்தாததால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

மறுபுறம் அந்த கனவு அணியில் ஒருவர் மட்டுமே இடம் பிடித்த சென்னை அணியில் ஜடேஜாவை போலவே ருதுராஜ் முதல் பதிரனா வரை விளையாடிய அனைவரும் அசத்தலாக செயல்பட்டதால் கோப்பையை வெல்ல முடிந்தது. அந்த வகையில் கனவு அணியில் இடம் பிடிக்காவிட்டாலும் “கப்பு முக்கியம் பிகிலு” என்பது போல் சென்னைக்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒரே அணியாக இணைந்து கோப்பையை வென்றுள்ளதாக தென்னாபிரிக்காவின் ட்வயன் பிரிட்டோரியஸ் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : 16 ஆவது ஐ.பி.எல் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெளியிட்ட மேத்யூ ஹைடன் – கேப்டன் யார் தெரியுமா?

இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கனவு அணியில் உங்களது அணியை சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம் பிடித்தாலும் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் – அது அணியாக வெற்றிக்கு போராடிய முயற்சியை காட்டுகிறது” என கூறியுள்ளார்.

Advertisement