IPL 2023 : 16 ஆவது ஐ.பி.எல் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெளியிட்ட மேத்யூ ஹைடன் – கேப்டன் யார் தெரியுமா?

Hayden
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முடிவில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதோடு ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை அணியுடன் தற்போது சி.எஸ்.கே அணியும் அந்த சாதனையை சமன் செய்துள்ளது.

IPL-2023

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் முடிவடைந்த கையோடு முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து இந்த ஆண்டின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக செயல்பட்ட அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களையும் அடிப்படையாக வைத்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்த நடப்பு ஐபிஎல் தொடருக்கான சிறந்த பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த அணியில் :

Dhoni

சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை துவக்க வீரர்களாக அவர் தேர்வு செய்துள்ளார். அதோடு மூன்றாவது இடத்தில் டூபிளெஸ்ஸிஸ்சும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக கேமரூன் கிரீன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக தோனியை அவர் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

பந்துவீச்சாளர்களை பொருத்தவரை ரஷீத் கான் மற்றும் நூர் முகமது ஆகிய இருவரையும் சுழற்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ள அவர் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி மற்றும் மோஹித் சர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்த இந்த ஆண்டிற்கான சிறந்த பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஒரே ஒரு போன் கால், தோனி சொன்னதுக்காக தான் சிஎஸ்கே அணியில் நான் அந்த பொறுப்பை ஏத்துக்கிட்டேன் – ப்ராவோ நெகிழ்ச்சி

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) சுப்மன் கில், 3) டூபிளெஸ்ஸிஸ், 4) சூரியகுமார் யாதவ், 5) கேமரூன் கிரீன், 6) ரவீந்திர ஜடேஜா, 7) தோனி, 8) ரஷீத் கான், 9) நூர் முகமது, 10) முகமது ஷமி, 11) மோஹித் சர்மா.

Advertisement