ஒரே ஒரு போன் கால், தோனி சொன்னதுக்காக தான் சிஎஸ்கே அணியில் நான் அந்த பொறுப்பை ஏத்துக்கிட்டேன் – ப்ராவோ நெகிழ்ச்சி

Bravo
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை 5வது முறையாக வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பின்னடைவுக்கு உள்ளான சென்னை இம்முறை ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றில் அசத்தி மாபெரும் ஃபைனலில் குஜராத்தை அதன் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் தோற்கடித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் மோகித் சர்மா போராடியும் 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சரும் பவுண்டரியும் பறக்க விட்ட ஜடேஜா சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தது மறக்க முடியாததாக அமைந்தது.

அந்த இந்த வெற்றிக்கு களத்தில் எம்எஸ் தோனி தலைமையில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் முக்கிய பங்காற்றியதை போலவே களத்திற்கு வெளியே ஸ்டீபன் பிளெமிங், மைக் ஹசி போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளராக செயல்பட்டு முக்கிய பங்காற்றினர். அந்த வகையில் இந்த வருடம் முதல் முறையாக வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ட்வயன் ப்ராவோவும் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்றால் மிகையாகாது. ஏனெனில் மற்ற அணிகளை போல சென்னையின் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் நட்சத்திர பவுலர்கள் இல்லாத நிலையில் தீபச் சஹாரும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

- Advertisement -

தோனியின் அழைப்பு:
அந்த நிலையில் பதிரனா, ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே போன்ற இளம் பவுலர்கள் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டதற்கு அவருடைய பயிற்சி முக்கிய காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அவர் கடந்த 2008இல் ஐபிஎல் பயணத்தை மும்பை அணியில் துவங்கினாலும் 2011 முதல் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக 2022 வரை செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்தார். இருப்பினும் 40 வயதை தொட்டுள்ள அவர் வயது காரணமாக கடந்த வருடம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருந்த தம்மிடம் வெளியே சென்று வேறு அணிகளில் இணையாமல் சென்னை அணிலேயே பயிற்சியாளராக இருக்குமாறு தோனி போன் காலில் கேட்டுக் கொண்டதால் சம்மதம் தெரிவித்ததாக ப்ராவோ நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சென்னை அணியில் பயிற்சியாளராக இணைந்தது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் விரிவாக குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “எங்கிருந்து நான் துவங்குவது. கடந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறலாம் என்று நான் முடிவெடுத்தது சோகமாக இருந்தாலும் வெற்றிகரமான கேரியரை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்”

- Advertisement -

“ஆனால் நான் பயிற்சியாளராக உருவாக வேண்டும் என்ற விதி சென்னை கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் தங்களது அணியில் ஒரு அங்கமாக இருக்குமாறு போன் காலில் அழைத்த போது உருவானது. அந்த அழைப்பு ஓய்வுக்கு பின் புதிய பாதையில் நடக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்தது. குறிப்பாக கிரிக்கெட்டில் கடவுள் எனக்கு கொடுத்த திறமைகளை ஒருநாள் மற்றவர்களுடன் பகிர்வதற்கான எண்ணத்தை நான் கொண்டிருந்தேன். அது ஐபிஎல் வரலாற்றின் ஒரு சிறந்த அணியில் நிறைவேறியது மகிழ்ச்சியை கொடுக்கிறது”

“இந்த சமயத்தில் பவுலிங் பயிற்சியாளர் எரிக் அவர்களுடன் இணைந்து செயல்படுவதை குறிப்பிட விரும்புகிறேன். பதிரனா, தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா, தீக்சனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வயன் பிரிடோரிஸ் போன்ற இளமையும் அனுபவமும் கலந்த இந்த அணியின் பவுலிங் கூட்டணியில் செயல்பட்ட ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உங்களுடைய கடின உழைப்பிற்கு இந்த வெற்றி பரிசாக கிடைத்துள்ளது”

இதையும் படிங்க:நம்ம சென்னை பையனை நம்பி அவங்க ஏலத்தில் எடுத்தது சரியான முடிவு. குஜராத் அணியை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

“முதல் முறையாக பயிற்சியளராக செயல்பட்ட அனுபவம் வாழ்க்கையில் எனக்கு கடவுள் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக நம்புகிறேன். இந்த வாய்ப்பில் நேர்மறையாக இதர வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுவேன் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பையும் தருணத்தையும் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement