IND vs AUS : நான் இந்தியா வந்த 2 முறையும் எங்க டீமால அதை பண்ண முடியல – ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படை

Smith
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டியானது இன்று நடைபெற உள்ள வேளையில் இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது. பொதுவாகவே வெளிநாட்டு தொடர்களில் ஆஸ்திரேலியா பங்கேற்கச் செல்லும்போது சம்பந்தப்பட்ட உள்நாட்டு அணியுடன் இணைந்து பயிற்சி போட்டிகளில் விளையாடும்.

ஆனால் இம்முறை இந்தியா வரவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சி போட்டிகள் எதுவும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டிகள் என்பது எங்களுக்கும் அவசியமும் இல்லை என ஏற்கனவே ஆஸ்த்ரேலியா கிரிக்கெட் வாரியமும் கூறிவிட்டது.

Steve Smith Virat Kohli IND vs AUS

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : வழக்கமாக நாங்கள் இங்கிலாந்துக்கு சென்றால் அங்கு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுவோம். ஆனால் இந்தமுறை இந்தியாவில் எந்த பயிற்சி ஆட்டமும் கிடையாது. எங்களுக்கு இந்தியாவில் பயிற்சி ஆட்டம் தேவைப்படாது என்றும் நான் நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் இந்தியாவில் வலைப்பயிற்சியின் போது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து பயிற்சி செய்தால் அதுவே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறோம் என்றும் ஸ்மித் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இதற்கு முன்னதாக நான் இரண்டு முறை இந்தியாவிற்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். அப்போதெல்லாம் நாங்கள் தொடரை கைப்பற்றியதில்லை. எனவே இம்முறை இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஆயுத்தமாக காத்திருக்கிறேன்.

இதையும் படிங்க : IND vs NZ : 3 ஆவது போட்டியிலாவது அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? – பாண்டியாவின் முடிவு என்ன?

அதேபோன்று கடந்த முறை இந்தியாவிற்கு நாங்கள் வந்தபோது சிட்னியில் உள்ள ஆடுகளங்கள் போல் இந்தியாவிலும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டது. அதேபோன்று இம்முறையும் இரு அணிகளுக்கும் பொதுவான ஆடுகளங்கள் இருக்கும் என தான் நம்புவதாக ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement