IND vs NZ : 3 ஆவது போட்டியிலாவது அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? – பாண்டியாவின் முடிவு என்ன?

IND-vs-NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்ற வேலையில் அந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

இதன் காரணமாக இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தற்போது சமநிலை வகிக்கின்றனர். இந்நிலையில் இந்த டி20 தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டி20 தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த துவக்க வீரர் ப்ரிதிவி ஷாவிற்கு கடந்த இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Hardik Pandya Prithvi Shaw

அதே வேளையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இடம் பிடித்த மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் அதிரடியை வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக இன்றைய போட்டியிலாவது நல்ல பார்மில் இருக்கும் அதிரடி வீரரான ப்ரிதிவி ஷாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

ஆனால் இந்த முடிவை எடுக்க வேண்டியது கேப்டன் ஹார்டிக் பாண்டியா தான். ஏற்கனவே தொடர்ச்சியாக சுப்மன் கில்லுக்கு ஆதரவளித்து வாய்ப்பினை வழங்கி வரும் பாண்டியா இந்த மூன்றாவது போட்டியிலும் அவருக்கு ஆதரவளிப்பாரா? அல்லது ப்ரித்வி ஷாவிற்கு வாய்ப்பளிப்பாரா? என்பது போட்டியில் துவக்கத்தில் தான் தெரியும்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றின் சுயநலமற்ற வீரர் தோனி தான். முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முடிவினை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement