IND vs AUS : அடுத்தமுறை எனக்கு வயசாயிடும். முடியுமானு பாக்கலாம் – ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படை

Steve Smith
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் நான்காவது போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்வோம் என்று கூறியிருந்தார். ஆனால் கடந்த மார்ச் 9-ஆம் தேதி துவங்கி நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

IND vs AUS

- Advertisement -

இதன்காரணமாக இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்து இந்த தொடரில் தாங்கள் விளையாடிய விதம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : இந்த போட்டி கடைசி நேரத்தில் எந்த ஒரு முடிவுக்கும் சாதகம் இல்லாமல் சென்றது.

அதேபோன்று இந்த மைதானம் பிளாட்டாக இருந்ததால் நிச்சயம் கடைசி நாள் வரை போட்டி செல்லும் என்று எதிர்பார்த்தோம். அந்த வகையில் இந்த போட்டி இறுதிவரை வந்தது. அதோடு இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த மைதானத்தில் இருந்த ரசிகர்களை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

Todd-Murphy

அதேபோன்று அவர்கள் எங்களுக்கு அளித்த விருந்தோம்பல் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தொடரை நாங்கள் சிறப்பாக ஆரம்பித்தோம். ஆனாலும் டெல்லி போட்டியில் ஒரு மணி நேரத்தில் நடந்த தவறால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இந்த அகமதாபாத் ஆடுகளத்தை பொறுத்தமட்டில் ரிசல்ட் வரும் என்று உறுதிசெய்ய முடியாது.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக இளம் வீரர்களான டாட் முர்பி மற்றும் குன்னுமேன் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோன்று நேதன் லயன் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அற்புதமாக பந்து வீசினார். அவரிடம் இருந்த சிறப்பான பந்துவீச்சை இந்த தொடர் முழுவதுமே நான் பார்த்தேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் விளையாடினால் எப்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெயிக்க முடியும்? ரசிகர்கள் கேள்விக்கு ரோஹித் வெளியிட்ட சூப்பர் பிளான்

மேலும் தொடர்ந்து பேசிய அவரிடம் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுவீர்களா? என்ற கேள்வி கடைசியாக கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : அப்போது எனக்கு கொஞ்சம் வயதாகி இருக்கும் என்று கூறினார். இதன் காரணமாக அடுத்த இந்தியா சுற்றுப்பயணத்திற்குள் அவர் ஓய்வு அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement