ஐபிஎல் விளையாடினால் எப்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெயிக்க முடியும்? ரசிகர்கள் கேள்விக்கு ரோஹித் வெளியிட்ட சூப்பர் பிளான்

Rohith-2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியை தோற்கடித்து தங்களை சொந்த மண்ணில் வலுவான கிரிக்கெட் அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. மறுபுறம் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து தொடரை இழந்தாலும் 3வது போட்டியில் அதிரடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதனால் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா பிளாட்டான பிட்ச்சில் 480 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு 571 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.

IND

- Advertisement -

ஆனால் அதற்குள் 4 நாட்கள் முடிந்ததால் இறுதியில் அப்போட்டி டிராவில் முடிந்தாலும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. அதன் காரணமாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் மோதுவதற்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா இம்முறை அதே தவறை செய்யாமல் சிறப்பாக செயல்பட்டு 2013க்குப்பின் முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல போராட உள்ளது.

ரோஹித் பிளான்:
ஆனால் கடந்த முறை ஃபைனலுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி 1 – 0 (2) என்ற கணக்கில் தொடரை வென்று சிறப்பாக தயாரான நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக சாம்பியன்ஷிப் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறம் ஃபைனலுக்கு ஒரு வாரம் முன்பாக பயணித்து வலைப்பயிற்சியில் மட்டும் ஈடுபட்ட இந்தியா சரியாக தயாராகாதது தோல்வியை கொடுத்தது. ஆனால் இம்முறையும் மே 28ஆம் தேதி வரை ஐபிஎல் நடைபெறும் நிலையில் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் துவங்கும் ஃபைனலுக்குள் இந்திய வீரர்கள் எப்படி தயாராக முடியும்? என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

wtc ind

இதனால் இவ்வளவு கடினமாக உழைத்துப் போராடியும் சென்ற முறை போல மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா தோற்கும் என்று சில ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசுவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் மே 21ஆம் தேதியுடன் லீக் சுற்று நிறைவடைந்து விடும் என்பதால் அப்போது வெளியேறியிருக்கும் 6 ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்ப உள்ளதாக ரோகித் சர்மா ரசிகர்களின் கவலைக்கு பதிலளித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரின் போதே இங்கிலாந்து சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய டுக் பந்துகளை பயன்படுத்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பயிற்சி எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் ஃபைனலுக்கு முன்பாக சிறப்பாக தயாராவது முக்கியம் என்று நான் நம்புகிறேன். எனவே மே 21ஆம் தேதி பிளே ஆப் சுற்று வாய்ப்புகளை பெறாத 6 ஐபிஎல் அணிகளில் இடம் பிடித்துள்ள முக்கிய வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்ப முயற்சிக்க உள்ளோம். இதற்கான திட்டத்தை விரைவில் ஆராய உள்ளோம். மேலும் ஃபைனலில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க உள்ளோம்”

Rohit-Sharma

“மேலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு டுக் பந்துகளை அனுப்பியுள்ளோம். எங்களது அணியில் ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலும் இங்கிலாந்து உட்பட உலகின் அனைத்து இடங்களிலும் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர்” என்று கூறினார். இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கான வேலைகளை இப்போதே இந்திய அணி நிர்வாகம் துவக்கியுள்ளது தெரிய வருகிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவும் ஃபைனலுக்கு பின்பு தான் இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஷ் தொடரில் களமிறங்க உள்ளது.

இதையும் படிங்க: IND vs AUS : ஷ்ரேயாஸ் ஐயர் இல்லனு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் அந்த முடிவை எடுத்தேன் – விராட் கோலி பேட்டி

எனவே அந்த அணியும் இந்தியாவைப் போலவே ஒரு வாரத்திற்கு முன்பாக இங்கிலாந்து பயணிக்கும் என்பதால் ஃபைனலில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தயார் நிலையில் 2 அணிகளும் களமிறங்கும் என நம்பலாம்.

Advertisement