IND vs AUS : ஷ்ரேயாஸ் ஐயர் இல்லனு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் அந்த முடிவை எடுத்தேன் – விராட் கோலி பேட்டி

Virat-Kohli
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த மார்ச் 9-ஆம் தேதி துவங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் ஐந்தாம் நாளில் ஆஸ்திரேலிய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. பின்னர் இரண்டு அணிகளின் கேப்டன்களும் சேர்ந்து போட்டியை டிராவில் முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

IND vs AUS

- Advertisement -

அதன் காரணமாக இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்திய அணி இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி முதல் இன்னிங்சில் 186 ரன்கள் குவித்தன் காரணமாக போட்டியின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய விராட் கோலி பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு வீரராக என்னிடமே எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பது முக்கியம்.

Kohli

அந்த வகையில் நாக்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இருந்து நான் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்வதாக செய்து வருவதாக உணர்கிறேன். களத்தில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற கவனத்தில் விளையாடி வருகிறேன். ஆனாலும் கடந்த காலத்தில் நான் செய்த அளவிற்கு தற்போது விளையாட முடியவில்லை என்ற ஏமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.

- Advertisement -

நான் என்னுடைய பாணியில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். என்னுடைய பார்வையிலிருந்து வெளியே சென்று ஒருவரை நான் குறை கூறுவதை விட நான் அணியில் ஏன் இருக்கிறேன் என்பதை களத்தில் என் செயல்பாடுகளின் மூலம் நியாயப்படுத்த வேண்டும். அந்த வகையில் நான் எனது பொறுப்பை உணர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவும் விரும்புகிறேன். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 60 ரன்களை நான் கடந்த போது போட்டியில் பாசிட்டிவாக அதிரடியாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இதையும் படிங்க : IND vs AUS : நாங்க என்ன நெனச்சோமோ அது நடந்துடுச்சி. டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேசியது என்ன?

ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார் என்ற தகவல் தெரிந்ததும் ஒரு பேட்ஸ்மேன் அணியில் குறைவாக உள்ளார் என்பதை உணர்ந்த நேரத்தில்தான் நான் அதிரடியை கைவிட்டு எவ்வளவு நேரம் விளையாட முடியுமோ அவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக பீல்டிங்கை செட் செய்து அருமையாக பந்து வீசினார்கள் என்றும் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement