IND vs AUS : நாங்க என்ன நெனச்சோமோ அது நடந்துடுச்சி. டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேசியது என்ன?

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதோடு தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த தொடரானது இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது. முதல் போட்டியிலிருந்தே நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக கருதுகிறேன்.

போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து இந்தத் தொடரின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நமது வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றிக்கு பிறகு பின்னர் அனைத்து வீரர்களின் உழைப்பும் உள்ளது.

Ashwin 2

இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே இந்திய அணி வீரர்களின் செயல்பாட்டினை நினைத்தால் பெருமையாக உள்ளது. அந்த அளவிற்கு அவர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அழுத்தத்தை அளித்து நமது அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் தனித்தனியாக தங்களது பங்களிப்பை வழங்கி இருந்தனர்.

- Advertisement -

இந்த தொடரில் நமது அணியின் வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. அதோடு அவர்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதாக நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். டெஸ்ட் கிரிக்கெட் என்பது எளிதான ஒரு வடிவம் கிடையாது. அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பாக அமைந்ததாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : வீடியோ : டிராவிஸ் ஹெட்டை சதமடிக்க விடாமல் போல்ட்டாக்கிய அக்சர் படேல் – பும்ராவின் தனித்துவ சாதனையை தகர்த்து புதிய சாதனை

அதோடு இந்த தொடரில் என்ன முடிவினை நாங்கள் எதிர்பார்த்தோமோ அதுவே எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி என ரோஹித் சர்மா தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது மார்ச் 17-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement