IND vs AUS : வான்கடே பிட்ச்ல இப்படி நடக்கும்னு நாங்க நெனைக்கல. தோல்விக்கு பிறகு – ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

Steve-Smith
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. அதன்படி நேற்று மார்ச் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

Siraj

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 35.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் மிட்சல் மார்ஷ் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பாக முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஆரம்பத்தில் 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தாலும் கே.எல் ராகுல், ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகயோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இறுதியில் 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 75 ரன்களுடனும், ஜடேஜா 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

KL Rahul 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : வான்கடே மைதானத்தில் இதுபோன்று நடக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. பொதுவாகவே இந்த மைதானத்தில் நல்ல ரன்களை அடிக்க முடியும். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர்.

- Advertisement -

250 ரன்களுக்கு மேல் அடித்து இருந்தால் இந்த போட்டியில் எங்களுக்கான வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்திய அணி வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பாட்னர்ஷிப் எங்களை அழுத்தத்திற்கு கொண்டு வந்தது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் மிட்சல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசி துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுததால் நாங்கள் ஆட்டத்திற்குள் வந்ததாக நினைத்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது பாட்னர்ஷிப் எங்களை மீண்டும் பின்னுக்கு தள்ளியது.

இதையும் படிங்க : IND vs AUS : இந்த போட்டியின் பிரமாதமான வெற்றிக்கு இவங்க 2 பேர்தான் காரணம் – ஹார்டிக் பாண்டியா புகழாரம்

ஒருவேளை நாங்கள் 260 முதல் 270 ரன்கள் வரை குவித்திருந்தால் இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறோம். இந்த போட்டியில் குறைவான ரன்களை அடித்ததாலே நாங்கள் தோல்வியை சந்தித்தோம் என்று நினைக்கிறேன். இந்திய அணியை பாராட்டியே ஆக வேண்டும் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement