IND vs AUS : இந்த போட்டியின் பிரமாதமான வெற்றிக்கு இவங்க 2 பேர்தான் காரணம் – ஹார்டிக் பாண்டியா புகழாரம்

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 35.4ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே குவித்தது.

IND vs AUS

- Advertisement -

பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 45 ரன்களும் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியில் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 45 ரன்களையும் குவித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பேசுகையில் கூறியதாவது : இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே நாங்கள் அழுத்தத்தை சந்தித்தோம். இருந்தாலும் அந்த தருணங்களை சரியாக சுதாரித்து வெற்றியை நோக்கி பயணித்ததில் மகிழ்ச்சி. உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

KL Rahul 1

எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக கையில் எடுத்து வெற்றி பெற்றுள்ளதாக நினைக்கிறேன். பீல்டிங்கின் போது ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதோடு ஜடேஜாவை பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பிடித்த அவர் தான் எவ்வளவு பெரிய வீரர் என்பதை இந்த போட்டியின் மூலம் காண்பித்துள்ளார்.

- Advertisement -

இந்த சேசிங்கின் போது சரியான நேரத்தில் நல்ல பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. அதனை கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் செய்து காண்பித்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக இருந்தது மட்டுமின்றி எங்களை வெற்றிக்கும் அழைத்துச் சென்றது. மைதானத்தில் நல்ல வெயில் இருந்தது. இந்த போட்டியில் என்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையுமே நான் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினேன்.

இதையும் படிங்க : IND vs SL : பாராட்டி தானே ஆகணும் வேற வழி, இந்தியாவை காப்பாற்றிய ராகுலை பாராட்டிய முன்னாள் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

இறுதியில் கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மேலும் நம்பிக்கையை தந்துள்ளது. ஒரு ஒட்டுமொத்த அணியாக நமது அணியின் செயல்பாட்டினை நினைத்து தான் பெருமை அடைவதாக கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement