இது ஒரு நல்ல கேள்வி.. 1,32,000 ரசிகர்கள் இருப்பாங்க.. இந்தியாவை சாய்க்கும் பிளான் பற்றி பேசிய ஸ்டீவ் ஸ்மித்

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது செமி ஃ
பைனலில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரலியா ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு டேவிட் மில்லர் 101, க்ளாஸென் 47 ரன்கள் எடுத்ததால் 213 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 62 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெறுவதற்கு உதவி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் 1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மாபெரும் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

மழுப்பிய ஸ்மித்:
அதில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. இதில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இத்தொடரின் லீக் சுற்றில் தங்களை 199 ரன்களுக்கு சுருட்டி தோற்கடித்த இந்தியாவை வீழ்த்தி 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது.

மறுபுறம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்றுள்ள இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதை விட 2003 உலகக்கோப்பை ஃபைனல் 2015 உலகக் கோப்பை செமி ஃபைனல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய தோல்விகளுக்கு இம்முறை ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா பழி தீர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் சொந்த மண்ணில் மிரட்டலாக செயல்பட்டு வரும் இந்தியாவை ஃபைனலில் சாய்க்க என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள் என்று முன்னாள் வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் தென்னாப்பிரிக்க போட்டியின் முடிவில் கேட்டனர். அதற்கு திட்டத்தை சொல்லாத ஸ்டீவ் ஸ்மித் மழுப்பலாக பதிலளித்தது பின்வருமாறு. “இது ஒரு நல்ல கேள்வி. உண்மையாகவே எனக்கு அதைப் பற்றி தெரியாது. அவர்கள் இந்த தொடரில் சிறந்த அணியாக 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ளனர்”

இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்கள்.. 700 விக்கெட்.. ஆனாலும் உயிரை கொடுக்கும் அஷ்வின் – பாராட்டும் ரசிகர்கள்

“இந்தியாவிடம் வலுவான பவுலிங் அட்டாக் இருக்கிறது. அவர்கள் வெற்றி பெற விரும்பும் 132000 ரசிகர்கள் முன்னிலையில் விளையாட உள்ளனர். அது மிகச்சிறந்த சூழ்நிலையாக இருக்கப் போகிறது. எனவே நாங்கள் அவர்களுக்கு எதிராக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிப்போம். அந்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார். முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement