சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்கள்.. 700 விக்கெட்.. ஆனாலும் உயிரை கொடுக்கும் அஷ்வின் – பாராட்டும் ரசிகர்கள்

Ashwin
- Advertisement -

தமிழக வீரரும் இந்திய அணியின் அனுபவ வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் இருந்து நிராகரிக்கப்பட்டிருந்த வேளையில் அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்றுவீரராக 2023-ஆம் ஆண்டு தற்போது நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் அனுபவம் உடைய வீரராக இருந்து வருகிறார். அதுமட்டும் இன்றி சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 270-க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் பங்கேற்றுள்ளார்.

அதேபோன்று கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த அவர் தற்போது 2023-ஆம் ஆண்டும் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் போது அணியில் இருக்கும் அதிர்ஷ்டத்தை பெற்றிருக்கிறார். இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அஸ்வின் அதன்பிறகு எந்த ஒரு போட்டியிலும் இடம் பிடிக்காமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆனாலும் அவர் அணிக்காக வழங்கும் பங்களிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டினை பெற்று வருகிறது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 4000+ ரன்கள், 700+ விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த வீரர் என்பதனால் அவர் போட்டிகளின் போது ஓய்வறையில் அமர்ந்து கொண்டு இளம் வீரர்களை மைதானத்திற்குள் குளிர்பானங்களையோ, தண்ணீர் பாட்டிலையோ எடுத்துச் செல்ல விட்டிருக்கலாம் ஆனால் பிளேயிங் லெவனில் விளையாடவில்லை என்றாலும் அணியின் வீரராக ஒவ்வொரு பந்தையுமே அவர் உன்னிப்பாக கவனிக்கிறார்.

அதோடு வீரர்களின் கொண்டாட்டத்தின் போது தானும் டக் அவுட்டில் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார். அதோடு எப்போதெல்லாம் இந்திய அணி அழுத்தத்தை சந்திக்கிறதோ, எப்போதெல்லாம் வீரர்களுக்கு அறிவுரை தேவையோ அப்போதெல்லாம் தண்ணீர் பாட்டல்களையும், குளிர்பானங்களையும் கையில் ஏந்தி கொண்டு ஒரு இளைஞரை போல மைதானத்திற்குள் ஓடும் அஸ்வின் தன்னுடைய அனுபவங்களை பந்துவீச்சாளர்களிடம் மட்டுமின்றி கேப்டனிடமும் பகிர்ந்து கொள்கிறார்.

- Advertisement -

அதோடு ஓய்வறையில் இருந்து மைதான எல்லையில் நிற்கும் வீரர்களுக்கு அடுத்தடுத்த திட்டங்களை விவரிக்கிறார். மேலும் டீம் மேனேஜ்மென்ட்டிடம் இருந்து எந்த ஒரு தகவல் சென்றாலும் அஸ்வினே அதனை பெற்றுக்கொண்டு மைதானத்தில் நேரடியாக வீரர்களிடம் தெரிவிக்கிறார். இப்படி தான் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்றாலும் அணியின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கும் அஸ்வின் இந்த உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற தகுதியானவர் என்று ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 2011-ல ஒரு ரசிகனா இங்க வந்தேன்.. ஆனா இப்போ இங்க நிக்குறது பெருமையா இருக்கு – ஷ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி

அதேபோன்று இந்த உலக கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி மற்ற போட்டிகளில் வாய்ப்பினை தவறவிட்டாலும் அது குறித்து பேசியிருந்த அஸ்வின் கூறுகையில் : எனக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கிறதா? என்பதெல்லாம் வருத்தம் கிடையாது. இந்திய அணியின் வெற்றியில் எந்த வழியிலாவது பங்களிக்க வேண்டும். ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அணிக்காக உயிரையே கொடுத்து பந்துவீசி வெற்றிக்காக போராடுவேன் அது மட்டுமே என்னுடைய விருப்பம். இந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருப்பதை பெருமையாக கருதுவதாக அஸ்வின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement