2011-ல ஒரு ரசிகனா இங்க வந்தேன்.. ஆனா இப்போ இங்க நிக்குறது பெருமையா இருக்கு – ஷ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் முடிவடைந்த வேளையில் முதல் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இதன் காரணமாக நாளை மறுதினம் நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே நான்காவது வீரராக களமிறங்கி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. இந்திய அணியின் நான்காவது வீரருக்கான இடத்தில் ஏகப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் ஷ்ரேயாஸ் ஐயர் தான்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளில் அவர் சொதப்பினாலும் அதன்பிறகு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த கடைசி லீக் ஆட்டத்திலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியிலும் அடுத்தடுத்து சதம் விளாசிய அவர் தற்போது முழு பார்மில் இறுதிப் போட்டிக்கு செல்ல உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியது குறித்து நெகிழ்ச்சியாக சில கருத்துக்களை பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : நான் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டியை எனது நண்பர்களுடன் மும்பை வான்கடே மைதானத்தில் வந்து நேரில் பார்த்தேன். ஒரு ரசிகராக கூட்டத்தில் நின்று இந்திய அணியை உற்சாகப்படுத்தினேன்.

இதையும் படிங்க : வெறியாகும் இந்திய ரசிகர்கள்.. 20 வருடம்.. 4 மாத தோல்விகளுக்கு ஆஸியை.. இரட்டை பழி தீர்க்குமா ரோஹித் படை?

அப்போதே நான் என் நண்பர்களிடம் நிச்சயம் இந்த மைதானத்தில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று கூறியிருந்தேன். தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை போட்டியில் இந்த மைதானத்தில் விளையாடி இருக்கிறேன். இதன்மூலம் எனது கனவு நினைவாகியுள்ளது. இது எனக்கு ஒரு மிகப்பெரிய தருணம் என நெகிழ்ச்சியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement