உண்மையிலேயே அந்த 2 டீமை ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம்ன்னு நெனைக்குறேன் – ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படை

Smith
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது லீக் சுற்று போட்டிகளின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ள வேளையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கான போட்டி கடுமையாக நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும் என்ற முனைப்புடன் விளையாட இருக்கிறது.

- Advertisement -

அதே வேளையில் இனிவரும் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதால் அந்த அணியும் வெற்றிக்கான முனைப்பு காட்டும். எனவே இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி கடைசி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் நிச்சயம் அரையிறுதிக்கான வாய்ப்பினை பெற முனைப்பினை காட்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : உலகக் கோப்பை தொடரின் முதல் நான்கு இடங்களுக்குள் வரவேண்டும் என்ற எண்ணத்தினை நாங்கள் கொண்டுள்ளோம். அனைத்து அணிகளுக்குமே அதே போன்ற எண்ணம் இருக்கும். நிச்சயம் நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். நடப்பு உலக கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் பின்னர் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளோம்.

இதையும் படிங்க : தப்பு அவங்க மேல தான்.. இந்தாங்க ஆதாரம்.. எனக்கு நியாயம் வேணும்.. ஐசிசியிடம் முறையிட்ட மேத்யூஸ்

இன்றைய போட்டி எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமைய உள்ளது. நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என்று நினைக்கிறேன். முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது இந்த தொடரில் மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement