தப்பு அவங்க மேல தான்.. இந்தாங்க ஆதாரம்.. எனக்கு நியாயம் வேணும்.. ஐசிசியிடம் முறையிட்ட மேத்யூஸ்

Angelo Mathews
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிஐசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் நடைபெற்றது. ஆனால் அந்த போட்டியில் நட்சத்திர இலங்கை வீரர் ஏஞ்சேலோ மேத்யூஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக காலதாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் அவுட் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

அதாவது அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய அவர் களத்திற்கு வந்ததும் தம்முடைய ஹெல்மெட் பழுதாகி இருந்ததை கவனித்தார். அதன் காரணமாக தம்முடைய அணியிடமிருந்து புதிய ஹெல்மெட்டை அவர் வாங்கி கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக நடுவரிடம் புகார் செய்த வங்கதேச அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்குமாறு வற்புறுத்தலாக கேட்டனர்.

- Advertisement -

நியாயத்தின் ஆதாரம்:
அதை சோதனை செய்த நடுவர் குழுவினர் முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற அடுத்த 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர்கொள்ள தவறியதால் மேத்தியூஸ் காலதாமதத்தால் அவுட் கொடுக்கப்படுவதாக அறிவித்தது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது. மேலும் தாம் அவ்வாறு செய்யவில்லை என்று மேத்யூஸ் கேப்டன் சாகிப் அல் ஹசனிடம் எடுத்துரைத்தும் அவர் கொஞ்சமும் மனங்கரங்காமல் இந்த மனசாட்சியற்ற செயலை செய்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஷாகிப்பை அவுட் செய்த போது “டைமாச்சு கிளம்புங்க” என்ற வகையில் மேத்தியூஸ் சைகை செய்து பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். அத்துடன் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை விட இப்படி ஒரு அவமானமான செயலை செய்த சாகிப் மற்றும் வங்கதேசம் மீதிருந்த மரியாதை போய்விட்டதாக போட்டியின் முடிவில் மேத்தியூஸ் விமர்சித்தார்.

- Advertisement -

மேலும் 2 நிமிடத்திற்குள் தாம் களத்திற்கு வந்த ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்த அவர் விரைவில் அதை ஐசிசியிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமரவிக்ரமா கேட்ச் கொடுத்து அவுட்டான போது மணி 15:48:50:16 என்ற வீடியோ ஆதாரத்தை புகைப்படமாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேத்யூஸ் தாம் களத்திற்கு 15:50:45:14 மணிக்கு வந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மரியாதையே போச்சு.. வங்கதேசத்தின் கேவலமான செயல்.. எங்ககிட்ட ஆதாரம் இருக்கு.. விளாசிய மேத்யூஸ்

அதாவது தாம் 5 நொடி முன்னதாகவே வந்து விட்டதாக ஐசிசியின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு பதிலளித்துள்ள அவர் தவறு நடுவர்கள் மீதிருப்பதாகவும் தமக்கு நியாயம் வழங்குமாறும் கூறியுள்ளது பின்வருமாறு. “இங்கே 4வது நடுவர் தவறு. ஹெல்மெட் கொடுத்த பின்பும் எனக்கு இன்னும் 5 வினாடிகள் இருந்ததை வீடியோ ஆதாரம் காட்டுகிறது. 4வது நடுவர் இதை சரி செய்ய முடியுமா? ஹெல்மெட் இல்லாமல் பவுலர்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு மிக முக்கியமானது. ஆதாரம். கேட்ச் பிடிக்கப்பட்டதிலிருந்து ஹெல்மெட் பழுதானது வரை” என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஐசிசி இந்த விவகாரத்தில் தலையிடும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement